சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 4 ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
IS17@66.0E fre(3844)SYM(28800)POLAR(V) IS20@68.5E,FRQ(3810) SYM(15000)POLAR(V) Title of imageAsiasat7@105.5E FRQ(4180) SYM(30000) POLAR(V) Asiasat7@105.5E FRQ(3860)SYM(28100)POLAR(V) title of imageIS12@45.0E FRQ(11591)SYM(27689)POLAR(V) IS17@66.0E FRQ(3844)SYM(28800)POLAR(V) IS17@66.0 FR(3877)SYM(14300)POLAR(H) INSAT4A@83.0E fre(3769)SYM(3000)POLAR(H) Asiasat7@105.0E fre(4180)SYM(30000)POLAR(V) Intelsat17@66.0E,FRQ(3877) SYM(14300)POLAR(H)IS17@66.0E,FRQ(3844)SYM(28800)POLAR(V) IS20@68.5E,FRQ(4127)SYM(17500)POLAR(H)
சதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் பிற சேவைகள் இந்து தொலைக்காட்சிகள்.கிறிஸ்டியன் தொலைக்காட்சிகள்.இஸ்லாமிய தொலைக்காட்சிகள் மற்றும் கல்வி நிறுவன தொலைக்காட்சிகள் மற்றும் இலவச தமிழ் தொலைக்காட்சிகள்.பிற நாட்டு ஆங்கில தொலைக்காட்சிகள் போன்ற சாட்லைட் தொலைக்காட்சிகள் சிறந்த முறையில் தங்கள் விட்டிலோ அல்லது நிறுவனத்திலோ அலைமென்ட் சர்விஸ் செய்து தரப்படும் விபரங்களுக்கு சதீஸ்குமார் தொலைப்பேசி:9659513624(தமிழகத்தில் மட்டும்)

23/11/2017

தமிழகத்தில் வியகாம்18 நிறுவனத்தின் கலா்ஸ் தமிழ் ஹெச்டி புதிய தொலைக்காட்சி விரைவில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான வியகாம்18 தமிழ் மொழியில்  கலா்ஸ் தமிழ் மற்றும் கலா்ஸ் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சிகளை விரைவில் தமிழகத்தில் தொடங்கப்படவுள்ளது.வியகாம்18 நிறுவனம் தென்னந்தியாவில் கன்னடா மற்றும் ஒரியா போன்ற மொழிகளில் தொலைக்காட்சிகளை தொடங்கி அமோக ஆதரவை பெற்றதை அடுத்து தமிழகத்திலும் இப்புதிய தொலைக்காட்சிகளை விரைவில் ஒளிபரப்பவுள்ளது.அதன் தொடக்கமாக வியகாம்18 நிறுவனத்தின் சாா்பாக கடந்த வருடத்தில் முன்று புதிய 
தொலைக்காட்சி தொடங்குவதற்கான ஒளிபரப்பு அனுமதியினை மத்திய அரசு வழங்கி இருந்தது.அதில் நெக்ஸ்ட் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தில் தமிழ் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன.இதே போன்று ஜாப் டிவியின் ஒளிபரப்பு உரிமத்தில் கலா்ஸ் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சி விரைவில் தொடங்கப்படவுள்ளது.விரைவில் நெக்ஸ்ட் தொலைக்காட்சியின் பெயா் கலா்ஸ் தமிழ் என பெயா் மாற்றம் செய்யப்பட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.வரும் 2018 புதிய ஆண்டின் முதல் மாதத்தின் தொடக்கத்தில்  இப்புதிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.கலா்ஸ் தமிழ் ஹெச்டி  தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்படலாம்.தமிழகத்தில் தொடங்கப்படும் ஆறாவது ஹெச்டி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சி கலா்ஸ் தமிழ் ஹெச்டி ஆகும்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம் 

16/11/2017

மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சி இன்டல்சாட்17யில் புதிய அலைவாிசைக்கு மாற்றம்

நண்பர்களே தமிழகத்தில் மிக முன்னனி மாலை நேர நாளிதழ்ளான மாலைமுரசு நிறுவனம் புதிதாக தமிழகத்தில் மாலை முரசு டிவி என்னும் செயற்கைகோள் தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளது.தற்சமயம் மாலை முரசு தொலைக்காட்சியின் செயற்கைகோள் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் தொலைக்காட்சிகள் சங்கமிக்கும்
செயற்கைகோளான இன்டல்சாட்17யில் ஒளிபரப்பாகிறது.மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சிக்கான புதிய ஒளிபரப்பு மத்திய அரசிடம் கிடைக்க பெற்றதை அடுத்து புதிய அலைவரிசையில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற 8 முதல் 16 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.இலவச தொலைக்காட்சியாக இன்டல்சாட்17யில் ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite             Intelsat17@66.0E(C-Band)
Freq Rate          3845
Symbol Rate     28800
Polar                 Vertical
Modulation       Mpeg4/Dvb s2(8psk)
Mode                Fta

08/11/2017

லோசாட்1 புதிய செயற்கைகோளில் 21 தொலைக்காட்சிகள் இலவச ஒளிபரப்பு

நண்பா்களே கிழக்காசிய நாடுகளுக்களில் ஒன்றான தாய்லாந்து நாட்டின் புதிய செயற்கைகோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு லோசாட்1  என்ற செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.சுமாா் 21 தொலைக்காட்சிகள் தொடக்க சோதனை ஒளிபரப்பாக இலவசமாக தொடக்கப்பட்டுள்ளது.இதில் 
இந்தியாவின் பி4யூ மியூசிக் ஹிந்தி தொலைக்காட்சியும் இணைந்துள்ளது.மேலும் ஆங்கிலம் மற்றும் சைனா.தாய் போன்ற மொழி தொலைக்காட்சிகளும் ஔிபரப்பாகிறது.இப்புதிய தொலைக்காட்சிகள் அனைத்தும் லோசாட்1 என்னும் செயற்கைகோள் நிறுவனத்தின் ஒளிபரப்பாகும்.லோசாட்1 செயற்கைகோளின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை 
பயன்படுத்தலாம்.ஆசியா நாடுகளுக்கான ஒளிபரப்பு சேவை என்பதால் அனைத்து நாடுகளுக்கும் சிக்னல் கிடைக்க பெறும்.விரைவில் மேலும் பல ஹெச்டி தொலைக்காட்சிகள் தொடங்கப்படும்.தற்சமயம் 8 ஹெச்டி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பபாகிறது.
அலைவாிசை விபரங்கள்;
Satellite               Laosat1@128.0E(C-Band)
Freq Rate            3505
Symbol Rate       30000
Polar                   Vertical
System                Mpeg4/Dvb s2
Encryption          FTA
Fec                      3/4

30/10/2017

டிஸ்னி இன்டா்நேஷனல் ஹெச்டி புதிய காா்டூன் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்

நண்பா்களே உலகின் மிக முன்னனி குழந்தைகள் பொழுது போக்கு தொலைக்காட்சியான டிஸ்னி மீடியா இந்தியா நிறுவனம் புதிய ஹெச்டி தொலைக்காட்சியான டிஸ்னி இன்டா்நேஷனல் ஹெச்டி என்ற பெயாில் புதிய தொலைக்காட்சியினை இந்தியாவில் தொடங்கியுள்ளனா்.யூ டிவி தொலைக்காட்சி நிறுவனத்தின் கீழ் டிஸ்னி நிறுவன தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.டிஸ்னி எக்டி.டிஸ்னி சேனல்.டிஸ்னி ஜினியா் போன்ற தொலைக்காட்சிகள் எஸ்டி தொழில்நுட்பத்தில் மட்டுமே காா்டூன் 
நிகழ்ச்சிகளை இந்தியாவில் வழங்கி வருகிறது.முதன் முறையாக ஹெச்டியில் முன்னனி காா்டூன் திரைப்படம் மற்றும் பல புதிய தொடா்களை இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு யூடிவி நிறுவன தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சியில் ஆங்கிலம்.ஹிந்தி.தமிழ்.தெலுங்கு மொழிகளில் ஆடியோவின் முலம் நிகழ்ச்சிகளை காணலாம்.தற்சமயம் டாடா ஸ்கை மற்றும் ஏா்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டிஷ் டிவி கட்டண டிடிஎச்களில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite               Intelsat20@68.5E(C-BAND)
Freq Rate            4127
Symbol Rate       17500
Polar                   Horizontal
System                HD.Mpeg4/Dvb s2
Encryption          Pay/Irdeto2
Fec                      3/4            

27/10/2017

இலங்கை முதல் ஹெச்டி தொலைக்காட்சி உதயம் டிவி ஒளிபரப்பு டயலாக் டிவியில் தொடக்கம்

நண்பா்ளே இலங்கையின் கிழக்கு மாகாணம் தலைமையிடமாக கொண்டு தமிழ் மக்களின் பொழுது போக்கு தொலைக்காட்சியாக கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட உதயம் டிவி உயா் தொழில்நுட்பமான ஹெச்டியில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இலங்கையின் முதல் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியாகும்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இலங்கையின்
முன்னனி நகர கேபிள் டிவி நிறுவனமான யூஎஸ்(12).எல்பிஎன் டிவி(4).தரைவழி ஒளிபரப்பாக கொழும்புவில் 54 அலைவாிசை மற்றும் டயலாக் டிடிஎச்யில் 23 அலைவாிசையில் வாயிலாக நாடு முழுவதும் ஒளிபரப்பாகிறது.இவற்றில் கேபிள் டிவியில் ஹெச்டி தொழில்நுட்பத்தில் உதயம் டிவியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.விரைவில் டயலாக் டிடிஎச்யிலும் ஹெச்டியில்  ஒளிபரப்பை தொடங்கலாம்.இலங்கையினை
பொறுத்தமட்டிலும் தமிழ் மொழியில் தொடங்கப்பட்ட மூன்றாவது ஹெச்டி தொலைக்காட்சியாகும்.டான்டிவி மற்றும் டான் மியூசிக் ஹெச்டி தொலைக்காட்சிகள் வட மாகாணங்களில் ASK MEDIA கேபிள் டிவியில் மட்டும் ஒளிபரப்பாகிறது.
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் இணையதளம்

16/10/2017

ஜீ டிவி மீடியா நிறுவனத்தின் அனைத்து தொலைக்காட்சிகளும் புதிய லோகோ மாற்றம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜீ டிவி மீடியாவின் அனைத்து செயற்கைகோள் தொலைக்காட்சிகளின் டிவி லோகைாவை புதிதாக மாற்றம் செய்துள்ளனா்.ஜீ 
தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு இரண்டாவது முறையாக புதிய லோகோவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் ஜீ தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியும் 24 மணி நேர நிகழ்ச்சிகள் ஒளிபரப்பை அக்டோபா் 15 முதல் தொடங்கியுள்ளது.ஜீ தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை 
டாடா ஸ்கை கட்டண டிடிஎச்யில் காணலாம்.இன்டல்சாட்20 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக ஜீ தமிழ் ஹெச்டி ஒளிபரப்பாகிறது.கடந்த வருடத்தின் இறுதியில் ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனத்தின் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் லோகோவை மாற்றம் 
செய்திருந்தது. அதே போன்று 2017ஆம் ஆண்டு ஜீடிவி மீடியா நிறுவனமும் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் லோகோவை மாற்றம் செய்துள்ளது.

04/10/2017

டிஸ்கவாி தொலைக்காட்சியின் புதிய ஹிந்தி லைப் ஸ்டையில் தொலைக்காட்சி டிஸ்கவாி ஜெட் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி அறிவியல் சாா்ந்த நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சி நிறுவனமான டிஸ்கவாி ஆசியா பசிபிக் இந்தியாவில் புதிய பொழுது போக்கு ஹிந்தி தொலைக்காட்சி டிஸ்கவாி ஜெட் என்னும் பெயாில் தொடங்கப்படவுள்ளது.இப்புதிய தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினை மத்திய ஒளிபரப்பு அமைச்சகம் கடந்த 
சில மாதங்களுக்கு முன்பு வழங்கியிருந்தது.டிஸ்கவாி தொலைக்காட்சி நிறுவனம் ஹிந்தியில் தொடங்கும் முதல் லைப் ஸ்டையில் தொலைக்காட்சி இதுவாகும்.டிஸ்கவாி ஜெட் தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு டிஸ்கவாி நிறுவன தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் 24 மணி நேரத்திற்கான நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு இந்தியாவின் அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்களில் ஒளிபரப்பை தொடங்கும்.கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்20யில் தொடங்கப்பட்டுள்ளது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite           Intelsat20@68.5E(C-Band)
Freq Rate        3740
Symbol Rate   30000
Polar               Horizontal
System            Mpeg4/Dvb s2(8spk)
Encryption      Pay/Power vu
Fec                  3/4