சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

23/08/2014

வேந்தர்டிவி 24 மணிநேர வர்த்தக ஒளிபரப்பு தொடக்கம் இன்டல்சாட்17@66.0E

நண்பர்களே தமிழகத்தின் SRM கல்வி குழுமத்தின் 24 மணிநேர பொழுது போக்குசெயற்கைக்கோள் தொலைக்காட்சியான வேந்தர் டிவியின் வர்த்தக ஒளிபரப்பு சேவை நாளை 24-8-2014 முதல் தொடங்கப்படவுள்ளது.இத்தொலைக்காட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் சோதனை ஒளிபரப்பை மட்டும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் வழங்கிவந்தது.பின்பு படிபடியாக தொலைக்காட்சியில் செய்திகள் மற்றும் திரைப்படபாடல்கள் போன்றவை வழங்கியது.தற்சமயம் புதிதாக
 தொடங்கப்படவுள்ள வேந்தர் தொலைக்காட்சியில் தொடர்கள் திரைப்படங்கள்.சிறுவர் நிகழ்ச்சிகள் மற்றும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது.இத்தொலைக்காட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் அவர்களின் பிறந்த நாள் முதல் புதிய ஒளிபரப்பு தொடங்கப்படவுள்ளது.இத்ததொலைக்காட்சியின் ஒளிபரப்பு தமிழகத்தின் அரசு கேபிள் மற்றும் கட்டண விடியோகான் மற்றும் ஏா்டெல் டிஜிட்டல் டிடிஎச்யிலும் ஒளிபரப்பாகிறது.தமிழகத்தின் தொலைக்காட்சி துறையில் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள்  வித்தியாசமான    கோணங்களில் இருக்கலாம்.இன்டல்சாட்17 செயற்கைக்கோளில் முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate            3844
Symbol Rate        27689
Polar                   Vertical
Modulation          Mpeg4/dvb s
Mode                  Fta

17/08/2014

சோனி மற்றும் ஜீ தொலைக்காட்சி நிறுவனங்கள் இரண்டு புதிய தொலைக்காட்சிகள் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனங்களான சோனி மற்றம் ஜீ மிடியா தங்கள் குழுமத்தில் இருந்து புதிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சோனி பால் என்ற பெயரில் 
தொலைக்காட்சியையும் ஜீ மிடியா நிறுவனம் புதிய ஹிந்தி திரைப்பட ஹேச்டி தொலைக்காட்சி & பிட்சர்  என்ற பெயரில் தொடங்கியுள்ளது.இந்த இரு புதிய தொலைக்காட்சிகளின் தொடக்க சோதனை ஒளிபரப்பு அந்நிறுவனங்களின் அலைவரிசைகளில் இன்டல்சாட்20@68.5E செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.கட்டண தொலைக்காட்சிகளாக தொடங்கப்பட்டுள்ள இத் தொலைக்காட்சிகளின் 24 மணிநேர ஒளிபரப்பு விரைவில் 
தொடங்கப்படவுள்ளது.ஜீ மீடியா தங்களின் குழுமத்தில் தொடங்கப்பட்ட இரண்டாவது ஹேச்டி ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சி  அன் பிட்சர் ஆகும்.
சோனி நிறுவனம் இவ்வருட தொடக்கத்தில் சோனி மேக்ஸ்2 திரைப்பட தொலைக்காட்சியை தொடங்கியிருந்தது குறிப்பிடதக்கது.

13/08/2014

கீரின் டிவி தமிழ் (GREEN TV AGRI) இந்தியாவின் முதல் விவசாய செயற்கைகோள் தொலைக்காட்சி இன்டல்சாட்20 உதயம்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி இந்தியாவில் முதன் முறையாக விவசாய தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கும் முதல் செயற்கைகோள் தொலைக்காட்சி கீரின் டிவி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.கீரின் டிவியின் செயற்கைகோள் சோதனை தொடக்க ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.5EAST
 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.இந்திய செயற்கைகோள் தொலைக்காட்சி துறையில் நிண்ட காலங்களுக்கு பிறகு முதன்முறையாக ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் விவசாயத்திற்கு என்று 24 மணிநேர தொலைக்காட்சியை தொடங்கியிருப்பது வரவேற்க்கதக்கது.இருப்பினும் இந்தியாவில் பொழுது போக்கு செயற்கைகோள் தொலைக்காட்சிகள் புதிது 
புதிதாக தோன்றி வரும் நிலையில் இப்புதிய விவசாய தொலைக்காட்சி இந்தியாவின் கிராமபுற விவசாயகளின் வரவேற்பை பெறும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பலாம்.இந்தியாவில் அரசு டிடி மற்றும் ஈடிவி தொலைக்காட்சிகள் விவசாய தொடர்பான நிகழ்ச்சிகளை நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகி வந்தது குறிப்பிடதக்கது.இப்புதிய தொலைக்காட்சியின் 24 மணிநேர நிகழ்ச்சிகள்      விரைவில் தொடங்கப்படலாம்.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஹிந்தி மற்றும் தமிழ் தெலுங்கு.கர்நாடகா போன்ற மொழியில் வழங்கவுள்ளது
அலைவரிசை விபரங்கள்:
Satellite               IS20@68.5
Freq Rate           4185
Symbol Rate       21600
Polar                   Vertical
Modulation          Mpeg4/dvb s2
Mode                  Fta

10/08/2014

தமிழகத்தில் கிடைக்கும் C/KU BAND செயற்கைகோள் தமிழ் வானொலிகளின் தொகுப்பு

நண்பர்களே செயற்கைகோள் வாயிலாக தமிழகத்தில் கிடைக்கும் C/KU BAND செயற்கைகோள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தமிழ் பன்பலைகள் மற்றும் வானொலிகளின் சிறப்பு தகவல்கள்.
இந்தியாவில் முதன்முதலாக அரசு நிறுவன வானொலி சேவையை ஆல் இந்திய ரேடியோ தொடக்கியது.இதன் நிகழ்ச்சிகள் அனைத்தும் மாவட்ட வாரியாக கேட்க கூடியதாக இருந்தது.பிறகு கடந்த 2003 ஆண்டில் தொடங்கப்பட்ட இலவச டிடிஎச் சேவையில் முதன்முதலாக தமிழ் வானொலி ஏர்தமிழ் மற்றும் எப்எம் ரெயின்போ செயற்கைகோள் ஒளிபரப்பை
இன்சாட்4Bயில் தொடங்கியது.இதன் ஒளிபரப்பு C/KU BAND யி்ல் கிடைக்கும் வகையில் தொடங்கப்பட்டது.மிக துல்லியாமான ஒளிபரப்பை இரு வானொலிகளும் இன்று வரை உலக தமிழ்ர்கள் கேட்ககூடிய வகையில் இலவச ஒளிபரப்பாக நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
              மலேசியா நாட்டின் அரசு தொலைக்காட்சி நிறுவனமான  RTM யின்   பன்பலையான மின்னல் எப்எம் தமிழ் வானொலி சேவையை அந்நாட்டு செயற்கைகோளான மீயாசாட்3யில் உலக தமிழ்ர்கள் கேட்கும் வகையில் C-

05/08/2014

டிடி பொதிகை(DD PODHIGAI),டிடி நேஷனல் தொலைக்காட்சி ஜிசாட்10@83.0Eயில் சோதனைஒளிபரப்பு தொடக்கம்

நண்பர்களே இந்திய அரசு தொலைக்காட்சிகளான டிடி நேஷனல் மற்றும் தமிழ் தொலைக்காடசியான டிடி பொதிகை அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளுக்கான சோதனை ஒளிபரப்பை புதிதாக ஜிசாட்10யில்
தொடங்கியுள்ளன.இந்த புதிய அலைவரிசையில் டிடி தொலைக்காட்சிகள் மற்றும் அரசு வானொலிகளும் இடம் பெற்றுள்ளது.இதில் தமிழக வானொலி சேவையான ஏர் தமிழ்யும் இடம் பெற்றுள்ளன.இத்த தொலைக்காட்சிகள் அனைத்தும் மிக சாதரான செட்டாப்பாக்ஸ் MPEG2யில் கிடைக்கிறது.இதன் சிக்னல் DVB S1யில் கிடைக்கிறது.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate          3885
Symbol Rate      27500
Polar                  Vertical
Modulation        Mpeg2/dvb s
Mode                Fta

03/08/2014

லக்ஸ் டிவி ஹேச்டி(LUXE TV HD)புதிய ஆங்கில லைப்ஸ்டையில் தொலைக்காட்சி ஆசியசாட்5@100.5Eயில் தொடக்கம்

நண்பர்களே ஆசியாவிற்கான புதிய ஆங்கில லைப்ஸ்டையில் தொலைக்காட்சி லக்ஸ் டிவி என்ற பெயரில் ஆசியாசாட்5யில்
தொடங்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சி ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வாழ் மக்களின் நடைமுறை வாழ்க்கை மற்றும் இன்றைய மக்களின் லைப்ஸ்டையில மாற்றங்கள் பற்றிய நிகழ்வுகளை நிகழ்ச்சிகளாக
வழங்குகிறது.லக்ஸ்டிவி தொலைக்காட்சி அதிநவின தொழில்நுட்பமான ஹேச்டியில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.இத்தொலைக்காட்சி கட்டண தொலைக்காடசியாக சைனாவின் EBU நிறுவனத்தின் டெலிபாட்யில் ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சைனா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate           3700
Symbol   Rate     30000
Polar                   Vertical
Modulation          HD/Mpeg4/dvb s2
Mode                  PAY/Fta