சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

27/09/2014

ஆசிய விளையாட்டு போட்டிகள் நேரடி ஒளிபரப்பு துர்தர்ஷன் டிடி ஹெச்டி(DD HD TV) தொலைக்காட்சியில்

நண்பர்களே இந்தியா அரசு பொது ஒளிபரப்பு சேவையான பிரசார் பாரதி துர்தர்ஷன் நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிதாக தொடங்கிய 
இந்தியாவின் அதிநவின உயர்தர தொழில்நுட்பம் அரசு ஹெச்டி தொலைக்காட்சியான டிடி ஹெச்டியில் தென்கோரியாவில் நடைபெற்று வரும் ஆசியா நாடுகளுக்கான  2014ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளை உயர் தொழில்நுட்ப விடியோவில் நேரடியாக 
ஒளிபரப்புகிறது.இத்தொலைக்காட்சி இந்திய அரசு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் செயற்கைகோளான இன்சாட்4B@93.0 EASTயில் ஒளிபரப்பாகிறது.முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.டிடி ஹெச்டிதொலைக்காட்சியை காண மிக அதிநவின ஹெச்டி செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தி காணலாம்.இருப்பினும் இந்தியாவின் 
டிடி இலவச ஒளிபரப்பு சேவையான டிடி பிரி டிடிஎச்யில் டிடிஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதக்க செய்தியாகும். பிரசார் பாரதி துர்தர்ஷன் நிறுவனத்தின் முதல் ஹெச்டி தொலைக்காட்சி இதுவாகும்.
அலைவரிசை விபரங்கள்
Freq  Rate            3725
Symbol Rate         27500
Polar                    Horizontal
Modulation           HD.MPEG2/DVB S
Mode                   Fta

21/09/2014

பிளிமேக்ஸ் மற்றும் ஐ பிளிம் ஆங்கில திரைப்பட தொலைக்காட்சிகள் பாக்சாட்1R@38.0Eயில் தொடக்கம்

நண்பர்களே துபாய் செயற்கைகோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு முனையாமான புஜராத் குழுமம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் பாக்சாட்1ஆர் செயற்கைகோளில் தொடங்கப்பட்ட புதிய 
அலைவரிசையில் ஆங்கில மற்றும் ஈரானிய திரைப்பட தொலைக்காட்சிகளான பிளிமேக்ஸ் மற்றும் ஐ பிளிம் ஒளிபரப்பு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.இத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு முதன்முதலில் பாக்சாட்1ஆர்யில் HORIZONTAL யில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது.சிறந்த பிரபலமான ஆங்கில திரைப்படங்கள் பிளிமேக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.தற்சமயம் முற்றிலும் இலவச தொலைக்காட்சிகளாக பாக்சாட்யில் ஒளிபரப்பாகிறது.

அலைவரிசை விபரங்கள்:
Freq Rate         3735
Symbol Rate     8000
Polar                Horizontal
Modulation      Mpeg4/dvb s2
Mode             Fta

14/09/2014

கிழக்காசிய நாடுகளின் பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு தொலைக்காட்சிகளின் தொகுப்பு

நண்பர்களே உலக நாடுகளில் மிக முக்கிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை 
வழங்கி வரும் மிக பெரிய சாட்லைட் தொலைக்காட்சி நிறுவனமான பாக்ஸ் 
ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் கிழக்காசிய மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு 
ஒளிபரப்பும் விளையாட்டு தொலைக்காட்சிகளை பற்றி சிறப்பு தொகுப்பு
             ESPN STAR SPORTS தொலைக்காட்சி நிறுவனத்தால் முதன்முதலில்  ESPN மற்றும் STAR SPORTS என்ற பெயர்களில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா  நாடுகளில் தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டு ஒளிபரப்பு சேவையை வழங்கிவந்தது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் பாக்ஸ் 
ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மக்களிடையே சிறந்த வரவேற்பை பெறும் வகையி்ல் முன்னனி விளையாட்டு தொடர்களை ஒளிபரப்பி வந்தது.பின்பு  பாக்ஸ் நிறுவனம் பாக்ஸ் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை ஆசியா நாடுகளில் விரிவுபடுத்தும் வகையில் ஆசியாவின் இஎஸ்பின் தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் கடந்த 2013 ஆண்டு முதல் இஎஸ்பின் தொலைக்காட்சி பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் 
தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட்டு முன்னனி நேரடி விளையாட்டு நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது.தெற்காசிய நர்டுகளான இந்தியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெயரிலேயே ஒளிபரப்பை வழங்கியது.கடந்த ஆண்டில் தெற்காசிய நர்டுகளில் ஸ்டார் 
ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்(1).ஸ்டார் ஸ்போர்ட்ஸ்(2).ஸ்டார் ஸ்போர்ட்ஸ்(3).ஸ்டார் ஸ்போர்ட்ஸ்(4) என்ற பெயரில் தொடங்கப்பட்டது.இதனை தொடர்ந்து பாக்ஸ் நிறுவனம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆசியா தொலைக்காட்சியை பாக்ஸ் ஸ்போர்ட்ஸ்(2) மற்றும் பாக்ஸ் 
போர்ட்ஸ்(3) தொலைக்காட்சிகளை தொடங்கியது.இத் தொலைக்காட்சிகள்  அனைத்தும் அந்நிறுவனங்களின் ஒளிபரப்பு முனையத்தின் முலம் ஆசியாசாட்7 செயற்கைகோளில் கட்டண தொலைக்காடசிகளாக ஒளிபரப்பாகிறது.பாக்ஸ் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் விளையாட்டை தவிர மற்ற அனைத்து விதமான விளையாட்டு தொடர்கள் ஒளிபரப்புகிறது.பாக்ஸ் நிறுவனம் அதிநவின உயர் தொழில்நுட்பமான ஹேச்டி ஒளிபரப்பிலும் பாக்ஸ் ஸ்போர்ட்ஸ்3 ஹேச்டியிலும் ஒளிபரப்பை வழங்கி வருகிறது

                                                                                               K.சதீஸ் சாட் தமிழ்   

12/09/2014

பப்லிக் மீயூசிக்(PUBLIC MUSIC TV)கன்னட தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் தொடக்கம்

நண்பர்களே கர்நாடக மாநிலத்தின் ரைட்மென் மிடியா பிலிமிட் நிறுவனத்தின் புதிய 24 மணிநேர கன்னட மியூசிக் தொலைக்காட்சி பப்லிக் மீயூசிக் என்ற 
பெயரில் தொடங்கப்படவுள்ளது என நமது இணையதளத்தில் கடந்த வாரத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.தற்சமயம் இப்புதிய தொலைக்காட்சி இன்டல்சாட்17@66.0E செயற்கைகோளில் சென்னை டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தில் இருந்து ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.தற்சமயம் கன்னட 
திரைப்பாடல்களுடன் கூடிய நிகழ்ச்சிகளின் 24 மணி ஒளிபரப்பை செப்டம்பர் மாதம் 28 திகதி முதல் தொடங்கப்படவுள்ளது.மிக துல்லியாமான விடியோ ஒளிபரப்பை தொடங்கிய பப்லிக் மியூசிக் தொலைக்காட்சி MPEG4/DVB S2 
தொழில் நுட்பத்தில் தொடங்கப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தில் பப்லிக் கன்னட செய்திகள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு இதே செயற்கைகோளில் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்க செய்தியாகும்.இவ்விரு தொலைக்காட்சிகளும் இலவச தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகிறது.
Parameter Details:
Freq Rate           4015
Symbol Rate      30000
Polar                  Vertical
Modulation         Mpeg4/dvb S2
Mode                 Fta

08/09/2014

நியூஸ் 7 (NEWS7 TAMIL) புதிய தமிழ் செய்தி தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு இன்டல்சாட்17ல் தொடக்கம்

நண்பர்களே தமிழகத்தின் செய்திகள் தொலைக்காட்சிகளின் வரிசையில் நிண்ட இடைவெளிக்கு பிறகு தமிழகத்தில் புதிய 24 மணிநேர தமிழ் தொலைக்காட்சி நியூஸ் 7 என்ற பெயரில் தொடக்கப்படவுள்ளது.இப்புதிய தொலைக்காட்சிக்கான செயற்கைகோள் சோதனை ஒளிபரப்பு தமிழ் 
தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல் சாட்17@66.0Eயில் ஹைத்ரபாத் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தில் இருந்து தொடக்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சிக்கான 24 மணிநேர ஒளிபரப்பு விரைவில் இன்டல்சாட்17லில் இவ்வருடத்தின் இறுதிக்குள் தொடக்கலாம்.நியூஸ்7 தொலைக்காட்சிகான பணியிட அறிவிப்புகள் அந்நிறுவனத்தின் இணையதளத்தில்(www.n7.tv) வெளியிடப்பட்டுள்ளது.தற்சமயம் கலர் கோடுகளுடன் காட்சியளிக்கும் நியூஸ் 7 தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தது 8 அடி அல்லது அதற்கு மேற்பட்ட டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்துவதன் முலம் அலைவரிசையை பெறலாம்.
அலைவரிசை விபரங்கள்
Freq Rate            3876
Symbol Rate       14300
Polar                   Horizontal
Modulation         Mpeg4/dvb s2
Mode                 Fta

06/09/2014

6 அடி டிஷ் ஆன்டெனாவில் சைனாசாட்6பி மற்றும் ஆசியாசாட்5 செயற்கைகோள்கள்

நண்பர்களே சதிஸ் சாட் தமிழ் தளம் 6 அடி குடையில் சைனாசாட்6பிசெயற்கைகோளையும்.ஆசியாசாட்5 செயற்கைகோளையும் இணைத்து ஒரே குடையில் பிடிக்கப்பட்டுள்ளது.இந்த இரு செயற்கைகோள்களிலும் மிக பயனுள்ள தொலைக்காட்சிகள் கிடைக்கிறது.இவற்றில் இந்திய
தொலைக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.சைனாசாட்6எ@115.E செயற்கைகோளில் CCTV DOC,CCTV10,CCTV NEWS INTERNATIONAL.CCTV RUSSIA,மற்றும் பல சைனா தொலைக்காட்சிகளும் கிடைக்கிறது.ஆசியாசாட்5@100.5E செயற்கைகோளில் அதிநவின ஹேச்டி தொலைக்காட்சிகளான FASHION TV HD.TRACE HD,EURO NEWS,FRANCE 24 NEWS,SAUDI QURAN ,RAJ TV,ARRA TV போன்ற தொலைக்காட்சிகள் இலவச
ஒளிபரப்பில் கிடைக்கிறது.இந்த இரு செயற்கைகோள்களுக்கும் இடையான தொலைவு (15 டிகிரி அளவுகளில்) உள்ளது.இதன் அமைப்பின் முலம் குறைந்தபட்சம் 100க்கும்  மேற்பட்ட தொலைக்காட்சிகளை காணலாம்.தகுந்த இணைப்பு சாதனங்களுடன் இதன் அமைப்பை 6.8 மற்றும் 10 அளவு  சி பேன்ட் டிஷ்  ஆன்டெனாகளில் பயன்படுத்தலாம்.இதில் சிங்கில் பொலாரிட்டி(LNB)யை பயன்படுத்தினால் குறைந்த பட்சம் 17 முதல் 25 K தரமுள்ள LNBயை பயன்படுத்தலாம்.டியுல் LNBயை பயன்படுத்தினால் இதே

தரமுள்ள LNBயை பயன்படுத்துவதன் முலம் அனைத்து அலைவரிசைகளையும் எளிதாக பெறமுடியும்.முதலில் ஆசியாசாட்5க்கு டிஷ் ஆன்டெனாவை அனைத்து அலைவரிசைகளும் கிடைக்கும் வகையில் செட்டிங் செய்த பின்பு சைனாசாட்6பிக்கு தகுந்த பிட்டிங் சாதனங்களுடன் ஆசியாசாட்5 LNBக்கு மேற்புறத்தில் மற்றொரு LNBயை சைனாசாட்6எ பொறுத்தவேண்டும்.அதிக சிக்னல் கிடைக்கும் அிலைவரிசையை பயன்படுத்துவது குறிப்பிடதக்கது.விபரங்களுக்கு சதீஸ் சாட் தமிழ் தளத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

01/09/2014

ஹெச்பி ஒ எச்டி.பாக்ஸ் மூவிஸ் பிரீமியம் எச்டி.ஜியோ வைல்ட் எச்டி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தாய்காம்6யில்

நண்பர்களே மியான்மர் நாட்டின் டிடிஎச் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான 4 நெட்வொர்க்கின் தொலைக்காட்சிகள் தற்காலிக இலவச ஒளிபரப்பாக ஔிபரப்பாகிறது.கிழக்காசிய நாடுகளின் மிக பிரபலமடைந்த தொலைக்காட்சிகளான 
1)ஹெச்பி ஒ எச்டி
2)பாக்ஸ் மூவிஸ் பிரீமியம் எச்டி
3)நேட் ஜியோ வைல்ட்எச்டி.
4)நேட் ஜியோ எச்டி 
5) எம்ஆர் 4டிவி எச்டி.
6)சேனல்7எச்டி
7)4டிவி எச்டி.
8) பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் 3 எச்டி
9) ஸ்டார் வேல்ட் எச்டி
10)சேனல் எம்டிவி எச்டி சைனா 
இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் மியான்மர் நாட்டில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளாகும்.இதன் இலவச ஒளிபரப்பு எ்வ்வித நேரங்களிலும் நிறுத்தப்படலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Freq rate            124604,12469
Symbol Rate       45000
Polar                  Vertical
Modulation         HD.Mpeg4/dvb s2

தாய்காம்6@78.5E(KU) கிழக்காசிய அலைவரிசைகள் முதன்முறையாக திண்டுக்கலில் பிடிக்கப்பட்டுள்ளது

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி தாய்லாந்து நாட்டின் செயற்கைகோளான தாய்காம்6யின் மிக குறைந்த அளவு சிக்னல் கிடைக்கபெறும் KU BAND அலைவரிசைகள் முதன்முறையாக தமிழகத்தின் திண்டுக்கலில் 6 அடி மெஸ் 
டிஷ்யில் பிடிக்கப்பட்டுள்ளது.தாய்காம்6 செயற்கைகோள் தாய்லாந்து மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளுக்கு மட்டும் ஒளிபரப்பை வழங்கும் வகையில் கவரேஜ் வடிவமைக்கப்பட்டுள்ளது.இத்செயற்கைகோளின் முலம் தாய்லாந்து நாட்டின் G-MM,RSTELECOM,PSI,TRUE VISION,MCOT,CTH NETWORKமற்றும் THAICOM மியான்மர் நாட்டின் 4NETWORK நிறுவனங்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பை வழங்கிவருகிறது.தாய்காம்6 செயற்கைகோளினை பெற குறைந்தபட்சம் 90CM 
முதல் அதற்கு மேற்பட்ட ஆப்செட் டிஷ்யை பயன்படுத்துவதன் முலம் செயற்கைகோளின் ஒளிபரப்பை பெறலாம்.இதில் 325 தொலைக்காட்சிகள் கிடைக்கிறது.அவற்றில் 25 தொலைக்காட்சிகளே இலவசமாக ஒளிபரப்பாகிறது.