சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

29/12/2014

தமிழக செய்திகள் தொலைக்காட்சியில் தந்திடிவி(THANTHI TV) முதன்முறையாக இலங்கை அதிபா் பிரத்யேக நோ்காணல்

நண்பா்களே தமிழகத்தில் செய்தி நாளிதழ் துறையில் அதிக வாசகா்களை பிடித்த தினதந்தி நாளிதழ் நிறுவனத்தின் சார்பாக கடந்த இரு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட செய்திகள் தொலைக்காட்சியான தந்தி டிவி தமிழக செய்திகள் தொலைக்காட்சியில் வரலாற்றில் முதன்முறையாக ஆசிய
கண்டத்தில் உள்ள ஒரு நாட்டின் அதிபரை நேர்காணல் மேற்கொண்டுள்ளது.ஆம் தமிழகம் மற்றும் இலங்கை தமிழ் மக்களின் அதிக எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்ட இலங்கை நாட்டின் அதிபரான மஹிந்த ராஜபக்சே அவா்களுடன் நேரகாணலை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக செய்திகள் தொலைக்காட்சிகள் இத்தகைய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு செய்திகள் தொலைக்காட்சிகள் புதுவிதமான நிகழ்ச்சிகளை
வழங்கி வருவது தமிழகத்தில் மீடியா சுதந்திரத்தை தெளிவாக பிரதிபலிக்கிறது.இந்தியாவின் மற்ற மொழி தொலைக்காட்சிகளும் இத்தகைய பிரபலமான அரசியல் தலைவா்கள் மற்றும் பெரிய நிர்வனாத்தின் தொழில் அதிபா்கள் நோ்காணல் நிகழ்ச்சிகளை வழங்கி வருவதும் குறிப்பிடதக்கது.தந்தி டிவியின் இத்தகைய புதிய முயற்ச்சியை நமது இந்திய மீடியா துறையின் சார்பாக வரவேற்ப்போம் வாழ்த்துவோம்.தொகுப்பு சதீஸ்சாட் தமிழ்

ஹொப் டிவி இந்தியா கிருஸ்துவ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.5E

நண்பா்களே அமெரிக்கா நாட்டின் ஹோப் கிருஸ்துவ ஊழியத்தின் சார்பாக இந்தியாவில் தொடங்கிய செயற்கைகோள் தொலைக்காட்சியான ஹொப் டிவி இந்தியாவில் தமிழ் கிருஸ்துவ ஊழிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட 
இத்தொலைக்காட்சியில் ஹிந்தி மற்றும் தென்னிந்தியாவின் தெலுங்கு.கன்னட.மலையாளம்.போன்ற மொழிகளிலும் ஊழிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மிக எளிதான MPEG4/DVB S1 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யில் காண கூடியதாக உள்ளது.முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக ஹோப்டிவி இன்டல்சாட்20 
செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.இத்தொலைக்காட்சியினை காண 6 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி காணலாம்.மேலும் ஹோப்டிவி நிறுவனத்தின் உலகளாவிய ஆங்கில தொலைக்காட்சியும் இதனுடன் ஒளிபரப்பாகிறது.மற்ற டிடிஎச் சேவைகளில் இத்தொலைக்காட்சி ஒளிபரப்பு இடம் பெறவில்லை.தொலைக்காட்சியின் அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate           4070
Symbol Rate       4340
Polar                   Vertical
Modulation          Mpeg2/Dvb s1
Mode                  Fta

23/12/2014

டிஷ் ஹோம் நேபாளம் டிடிஎச் தொலைக்காட்சிகள் புதிய செயற்கைகோளான அம்ஸ்4@65.0eயில் தொடக்கம்

நண்பா்களே நேபாளம் நாட்டின் டிடிஎச் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான டிஷ் ஹோம் டிடிஎச் யின் தொலைக்காட்சிகள் புதிய செயற்கைகோளான அம்ஸ்4@65.0Eயில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.தொடங்ப்பட்டுள்ள இப்புதிய ஒளிபரப்பு செயற்கைகோள்
கடந்த சில வருடத்தில் விண்ணில் செலுத்தப்பட்டது.இந்நிறுவனத்தின் டிடிஎச் ஒளிபரப்பு முதன்முறையாக இன்டல்சாட்906 செயற்கைகோளில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.இந்நிறுவனத்தின் அதிகபடியான 
தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை தொடங்கும் வகையில் இப்புதிய
செயற்கைகோளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..டிஷ் ஹோம் டிடிஎச்யில் நேபாளம் மற்றும் இந்திய தொலைக்காட்சிகள் ஒளிபரப்படுகிறது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள இரு புதிய அலைவரிசைகளில் தொலைக்காட்சிகள் அனைத்தும் இலவச ஒளிபரப்பாகிறது.இவை கட்டண தொலைக்காட்சிகளா மாற்றப்படலாம்.இப்புதிய செயற்கைகோளினை பெற குறைந்தபட்சம் 6 அடி கேயூ பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மிக குறைந்த அளவுவே சிக்னல் தென்தமிழகத்தில் கிடைப்பது குறிப்பிடதக்க செய்தியாகும்.
முதன் முறையாக அம்ஸ்4 செயற்கைகோள் தென் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் பிடிக்கபட்டுள்ளது குறிப்பிடதக்கது.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate             10860,10916
Symbol Rate         44997
Polar                     Horizontal
Modulation            Mpeg4/dvb s2
Mode                    Fta

21/12/2014

பிபிசி மற்றும் சிஎன்என் பிரபல ஆங்கில செய்திகள் தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பில் டிடிஸ் டிடிஎச்யில்

நண்பா்களே உலக நாடுகளின் மிக பிரபலமான முன்னனி நிகழ்வுகளை நேரடி செய்திகளாக வழங்கும் ஆங்கில செய்திகள் தொலைக்காட்சியான இங்கிலாந்து நாட்டின் பிபிசி நிறுவனத்தின் ஆங்கில செய்திகள் 
தொலைக்காட்சியான பிபிசி வேல்ட் நியூஸ் மற்றும் அமெரிக்கா நாட்டின் சிஎன்என் செய்திகள் தொலைக்காட்சிகள் முற்றிலும் இலவச ஒளிபரப்பு சேவையாக மங்கோலிய நாட்டின் டிடிஸ் டிடிஎச்யில் ஒளிபரப்பாகிறது.இத்தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் டிடிஎச் சேவை கிழக்காசிய நாட்டை சார்ந்த செயற்கைகோளான டெல்ஸ்டார்18@138.0Eயில் ஒளிபரப்பாகிறது.கடந்த இரு மாதங்களாக இலவச ஒளிபரப்பாக உள்ள ஆங்கில செய்திகள் தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள் அனைத்து நாடுகளுக்கு ஒளிபரப்பு ஓரே மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு வழங்குகிறது.

அலைவரிசை விபரங்கள்:
Freq Rate          12630
Symbol Rate      43200
Polar                  Horizontal
Modulation         Mpeg4/dvb s2
Mode                 Fta

20/12/2014

சதீஸ் சாட் தமிழ் இணையதளத்தின் கிருஸ்துமஸ் தின நால்வாழ்த்துக்கள்

உலகமெங்கும் வாழும் தமிழ் நண்பா்கள் மற்றும் கிருஸ்துவ தமிழ் தோழா்கள் அனைவரும் சதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் இனிய கிருஸ்துமஸ் தின நால்வாழ்த்துகள்.

13/12/2014

ரூபவாஹினி டிவி.சுய தின(ஐடிஎன்) தொலைக்காட்சிகள் (RUPAVAHINI TV,ITN TV) யூடெல்சாட்70B@70.0E செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பா்களே இலங்கை நாட்டின் அரசு சிங்களா மொழி தொலைக்காட்சிகளான ரூபவாஹினி டிவி.மற்றும் சுய தின(ஐடிஎன்) தொலைக்காட்சிகள் புதிதாக     தெற்காசிய நாடுகளுக்கான செயற்கைகோள் ஒளிபரப்பை முதன்முறையாக யூடெல் சாட்70B@70.0E பி செயற்கைகோளில் தொடங்கியுள்ளனா்.இத்தொலைக்காட்சிகள் இலங்கை நாட்டில் ஒளிபரப்பு 
தொடங்கப்பட்ட நாள் முதல் மிக எளிய தொழில்நுட்பமான டிரஸ்ட்ரையில் தொழில்நுட்பத்தில் நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது.மேலும் இலங்கை நாட்டின் டயலாக் டிடிஎச் வயிலாகவும் ஒளிபரப்பை வழங்கிவருகிறது.தற்சமயம் இத்தொலைக்காட்சிகள் 60செமீ அளவுள்ள கேயூ டிஷ் ஆன்டெனா முலமாக சிக்னல் கிடைக்கிறது.தொலைக்காட்சிகளை அதிநவின தொழில்நுட்பம் பொருந்திய MPEG4/DVB S2 செட்டா பாக்ஸ்யில் கிடைக்கிறது.வரக்கூடிய காலங்களில் இலங்கை தமிழ் மற்றும் சிங்களா மொழி தொலைக்காட்சிகள் இப்புதிய செயற்கைகோளின் முலமாக ஒளிபரப்பை தொடங்கலாம்.தொடங்கப்பட்ட செயற்கைகோள் ஒளிபரப்பு ஜொ்மனி நாட்டின் ஹாரிசான் டெலிபாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் 
நிகழ்ச்சிகளை வழங்கப்படுகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate               11292
Symbol Rate           44997
Polar                      Horizontal
Modulation             Mpeg4/dvb s2
Mode                     Fta

08/12/2014

சாய்ராம் டிவி.மீனாட்சி டிவி புதிய தமிழ் தொலைக்காட்சிகளுக்கு மத்திய ஒளிபரப்பு அமைச்சகம் அனுமதி

நண்பா்களே தமிழகத்தில் ஒளிபரப்பாகும் செயற்கைகோள் தொலைக்காட்சிகளில் மேலும் இரண்டு புதிய தமிழ் தொலைக்காட்சிகளுக்கான அனுமதியை இந்திய அரசு கிழ் செயல்படும் மத்திய ஒளிபரப்பு அமைச்சகம்2014ஆம் ஆண்டுயில் வழங்கியுள்ளது.சென்னை சாய்ராம் கல்வி மற்றும் மீடியா குழுமத்தின் 
சார்பாக புதிய பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சி சாய்ராம்டிவி என்ற பெயரில் அனுமதி பெற்றுள்ளது.இதே போன்று மீனாட்சி மீடியா குழுமத்தின் சார்பாகவும் மீனாட்சி டிவி என்ற பெயரில் அனுமதி பெற்றுள்ளது.இந்த ஆண்டு மத்திய ஒளிபரப்பு அமைச்சகம் 37 புதிய தொலைக்காட்சிகளுக்கான செயற்கைகோள் ஒளிபரப்பு அனுமதியை வழங்கியுள்ளது.இப்புதிய தமிழ் தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு வரகூடிய காலங்களில் தொடங்கப்படலாம்.இருப்பினும் கடந்த சில வருடங்களில் மத்திய ஒளிபரப்பு அமைச்சகத்தின் அனுமதி பெற்ற சில புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பில் மற்ற மாநில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.

03/12/2014

இந்தியாவின் டிடி பிரி டிஷ் டிடிஹெச்யில் புதிய அலைவரிசை ஒளிபரப்பு இன்சாட்4பி@93.0Eயில் தொடக்கம்

நண்பா்களே இந்தியாவின் விடுதேடி வரும் இலவச தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான டிடி பிரி டிஷ் டிடிஹெச்யில் புதிய அலைவரிசை ஒன்று தொடக்கப்பட்டுள்ளது.இப்புதிய அலைவரிசை தற்சமயம் ஒளிபரப்பாகி வரும் இன்சாட்4பி@93.0E செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.இப்புதிய 
அலைவரிசையில் 27 தொலைக்காட்சிகளுக்கான ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.டிடி பிரி டிஷ் யில் புதிய தொலைக்காட்சிகள் விரைவில் சேர்க்கப்படவுள்ளது.தற்சமயம் அரசு தொலைக்காட்சியான டிடி ஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.தென்னிந்திய தொலைக்காட்சிகள் சோ்க்கப்பட அதிக வாய்ப்புகள் காணபடுகிறது.தொடங்கப்பட்டுள்ள அலைவரிசை DVB S/MPEG4 தொழில்நுட்பத்தில் தொடக்கபட்டுள்ளதின் அடிப்படையில் MPEG4 செட் டாப் பாக்ஸ் பயன்படுத்தி வரக்கூடிய தொலைக்காட்சிகளை இனி காணலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate                11110
Symbol Rate            30000
Polar                       Vertical
Modulation              Mpeg4/Dvb s2
Mode                      Fta