சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

29/06/2014

இன்வஸ்டிகேஷன் டிஸ்கவரி(IDTV) புதிய புலனாய்வு தொலைக்காட்சியை தொடங்கியது டிஸ்கவரி

நண்பர்களே இந்தியாவின் மிக பிரபலமான அறிவியல் மற்றும் விலங்கினங்கள் தொடர்பான பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் நிறுவனமான டிஸ்கவரி தொலைக்காட்சி இந்தியாவில் புதிய புலனாய்வு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி ஒன்றை இன்வஸ்டிகேஷன் டிஸ்கவரி என்ற பெயரில் தொடங்கியுள்ளது.இந்த புதிய
தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.0Eயில்
டிஸ்கவரி நிறுவனத்தின் அலைவரிசையில் கட்டண தொலைக்காட்சியாக

23/06/2014

பாக்ஸ் ஆக்ஸன் மூவிஸ்(FOX ACTION MOVIES) ஒளிபரப்பு தொடக்கம் பாலபா டி@113யில்

நண்பர்களே இந்தோனிசியா நாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான ஸ்கைஇந்தோ கட்டண தொலைக்காட்சிகளின் ஆங்கில திரைப்பட தொலைக்காட்சியாக பாக்ஸ் எண்டர்டெய்மென்ட்யின் அதிரடி ஆக்ஸன்
 திரைப்படங்களை ஒளிபரப்பும்  தொலைக்காட்சியான பாக்ஸ் ஆக்ஸன் மூவிஸ் ஒளிபரப்பு புதிதாக தொடங்கியுள்ளனர்.இந்த தொலைக்காட்சி கிழக்காசிய நாடுகளுக்கு  பாக்ஸ் எண்டர்டெய்மென்ட் நிறுவனம் ஒளிபரப்பும் தொலைக்காட்சியாகும்.மிக அதிரடியான ஆங்கில திரைப்படங்களை
 வழங்கும் தொலைக்காட்சியாகும்.இந்தியா.இலங்கை போன்ற நாடுகளுக்கு ஸ்டார் மூவிஸ் ஆக்ஸன் என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது.தற்சமயம் இலவச ஒளிபரப்பாக பாக்ஸ் ஆக்ஸன் மூவிஸ் ஸ்கைஇந்தோ அலைவரிசையில் பாலபா டி@113 செயற்கைகோளில்
ஒளிபரப்பாகிறது.இதன் ஒளிபரப்பு எவ்வித நேரங்களிலும் நிறுத்தப்படலாம்.
ஸ்கைஇந்தோ நிறுவன கட்டண தொலைக்காட்சிகள் MPEG4/DVB S மற்றும் MPEG4/DVB S2 சிக்னல் வடிவத்தில் கிடைக்கிறது.குறைந்த பட்சம் 8 மற்றும் 10 அடி டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்துவதன் முலம்  இந்த ஸ்கைஇந்தோ நிறுவன தொலைக்காட்சிகளை பார்க்கலாம்.
அலைவரிசை விபரங்கள்;
Freq Rate              4140 / 4100
Symbol Rate          30000
Polar                      Vertical
Modulation             Mpeg4/dvb s1/s2
Mode                     PAY/FTA

18/06/2014

ரேடியோ ஹலோ( RADIO HELLO 89.5 UAE) துபாய் தமிழ் ரேடியோ ஒளிபரப்பு பாக்சாட்1Rயில் தொடக்கம்

தமிழ் நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி தமிழகத்தின் முன்னனி நாளிதழ்ளான மாலைமலர் நடத்தும் வானொலி சேவையான ஹலோ பன்பலை வளைகுடா நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு துபாய் நாட்டில் நடத்தும் வானொலி சேவையான ரேடியோ ஹலோ 89.5யின் செயற்கைகோள் ஒளிபரப்பை
பாகிஸ்தானின் பாக்சாட்1ஆர்@38.5E செயற்கைகோளில் EMAX TVதொலைக்காட்சி நிறுவனம் தொடங்கியுள்ளனர்.இவற்றில் குறிப்பிடதக்க செய்தி என்னவென்றால் இந்தியாவின் தமிழ் நாட்டை சார்நத ஒரு தமிழ் வானொலி ஒளிபரப்பு முதன்முறையாக பாகிஸ்தானின் செயற்கைகோளில் இடம் பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.இந்த ஹலோ வானொலி செயற்கைகோள் ஒளிபரைப்பை எவ்வித நேரங்களில் மாற்றப்படலாம்.மிக
எளிதான செட்டாப்பாகஸ்யில் கிடைக்கிறது.தமிழகத்தில் ஹலோ பன்பலை செயற்கைகோள் ஒளிபரப்பு அல்லாது இணையதள நேரடி ஒளிபரப்பு மற்றும் மாவட்ட வாரியாக 106.5 அலைவரிசையில் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்க செய்தியாகும்.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate             3733
Symbol Rate         18000
Polar                     Vertical
Modulation            Mpeg2/dvb s
Mode                    Fta

15/06/2014

ஜீ மீடியா(ZEE ZINDAGI TV)தொடங்கும் புதிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஜி ஜிந்தகி ஜின்23 முதல்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் நிறுவனமான ஜி மிடியா தனது குழமத்தில் இருந்து புதிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஜி ஜிந்தகி என்ற பெயரில் ஹிந்தியில் தொடங்கவுள்ளது.இத்த புதிய தொலைக்காட்சியின் செயற்கைக்கோள்  சோதனை  ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் ஜிகுழுமத்தின் அலைவரிசையில் தொடங்கியுள்ளனர்.கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ள இதன்
24 மணி நேர ஒளிபரப்பு ஜின் 23 முதல் தொடங்கப்படவுள்ளது.வட மாநிலங்களை பொறுத்தமட்டிலும் ஜி மிடியா நிறுவனம் ஹிந்தியில் மொழியில் பல பொழுது போக்கு தொலைக்காட்சிகளை தொடங்கியிருக்கும் நிலையில் இந்த புதிய தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் வித்தியாசமானதாக இருக்கும் என ஜி மிடியா தெரிவித்துள்ளது.ஜீடிவியின் நிகழ்ச்சிகளையே மற்ற தொலைக்காட்சிகளில் ஜி மிடியா ஒளிபரப்பாகி வருது குறிப்பிடதக்க செய்தியாகும்.வடமாநிலங்களில் நேயர்களை தக்கவைக்கும் புதிய
முயற்ச்சியுடன் புதிய தொலைக்காட்சிகளை முன்னனி நிறுவனங்கள் தொடங்கி வருகின்றன.கடந்த வருடத்தில் வியகாம்18 நிறுவனம் ரிஸ்டி தொலைக்காட்சியையும்.சோனி நிறுவனம் சோனி மேக்ஸ்2 திரைப்பட தொலைக்காட்சியையும் ஜி டிவி நிறுவனம் ஜி அன்மோல் போன்ற தொலைக்காட்சிகளை தொடங்கியிருப்பது குறிப்படதக்க செய்தியாகும்.ஜி ஜிந்தகி தொலைக்காட்சி ஜி மிடியாவின் டிஷ்டிவி டிடிஎச்யில் சேர்க்கப்பட்டுள்ளது. 

05/06/2014

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் வழங்க அமைச்சர்கள் கோரிக்கை

நண்பர்களே தமிழ் நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு அரசு டிஜிட்டல் கேபிள் ஒளிபரப்பு உரிமம் விரைவில் வழங்க வேண்டும் என தமிழக அதிமுக மக்களவை அமைச்சர்கள் மத்திய ஒளிபரப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் இது தொடர்பாக தமிழக முதல்வர் அவர்கள் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்.கடந்த 2012 வருடத்தில் தமிழக அரசால் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி சேவை தமிழகத்தின அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் ஒளிபரப்பாகும்
கேபிள் ஒளிபரப்பு சேவையின் தரத்தை உயர்த்தும் வகையில் மற்றும் சிறப்பான தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை வழங்கும் வகையில் தமிழக அரசு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.கடந்த மத்திய ஆட்சியில் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்குவதில் மத்திய ஒளிபரப்பு ஆணையம் மெத்தனம் காட்டி வந்தது.தமிழகத்தை பொருத்தமட்டிலும் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் டிஜிட்டல் கேபிள் ஒளிபரப்பு உரிம்மத்தை பெற்றுள்ளன.இருப்பினும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தொடக்கத்தால் தமிழ் நாடு முழவதும் தனியார் நிறுவனங்கள்
டிஜிட்டல் ஒளிபரப்பை தொடங்க தயக்கம் காட்டிவருகின்றன.தமிழ அரசின் இத்த முயற்ச்சியின் முலம் நகர்புற மற்றும் கிராமபுற மக்கள் பயனடைவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்தியில் புதிய ஆட்சி அமைந்ததை அடுத்து விரைவில் அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம்  மத்திய அரசு வழங்கும் என தெரிகிறது.
                                                                                                       தகவல் தொகுப்பு
                                                                                            K.சதீஸ் சாட் தமிழ் 

03/06/2014

ஸ்ரீ சங்கரா டிவி உட்பட 28 புதிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு டிஷ்டிவியில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் பிரபல டிஷ்டிவி டிடிஎச் நிறுவனத்தின் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சில புதிய தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை புதிய செயற்கைகோளான SES7@95.0E யில் புதிய அலைவரிசையில் தொடங்கியுள்ளனர்.
இந்த தொலைக்காட்சிகள் டிஷ்டிவியின் பழைய செயற்கைகோள் அலைவரிசைகளில் கட்டண தொலைக்காட்சியாகவும் உள்ளன.தென் இந்தியாவின் சில முன்னனி
தொலைக்காட்சிகளும் இந்த புதிய ஒளிபரப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.இவற்றில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகள் அனைத்தும் சி பேன்ட் அலைவரிசையில் இலவச தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்க செய்தியாகும்.இந்த தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு நிறுவனத்தின் சோதனை ஒளிபரப்பே எவ்வித நேரத்திலும் இதன் இலவச ஒளிபரப்பு நிறுத்தப்படலாம்.
அலைவரிசை விபரங்கள்;
Freq Rate          12112
Symbol Rate      40700
Polar                  Horizontal
Modulation         Mpeg2/dvb s
Mode                 Fta

02/06/2014

மெய்னா எல் டிவி ஹிந்தி மீயூசிக் தொலைக்காட்சி உதயம் இன்சாட்4எயில்

நண்பர்களே ஹாியான மாநிலத்தின் பண்பாட்டு காலச்சாரங்களை அடிப்படையாக புதிய சாட்லைட் தொலைக்காட்சி மெய்னா எல் டிவி என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.இந்த தொலைக்காட்சி ஹரியான
 மாநிலத்தின் முதல் பாடல் தொலைக்காட்சியாகும்.மெய்னா எல் டிவி  தொலைக்காட்சியான சாட்லைட் ஒளிபரப்பு இந்தியாவின் இன்சாட்4எ செயற்கைகோளில் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.வட மாநில தொலைக்காட்சிகளை பொருத்தமட்டிலும் ஹிந்தி திரைப்பாடல்களை 24
மணிநேரம் ஒளிபரப்பு வருவதில் சற்று இந்த புதிய தொலைக்காட்சி  வித்தியாகமானதாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாலம்.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate        4140
Symbol Rate    7500
Polar                Horizontal
Modulation       Mpeg4/Dvb s2
Mode               Fta