சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

31/10/2014

ஓம் கார-(OMKARA TV-AUM NETWORK UK)புதிய ஆன்மிக ஐரோப்பா தமிழ் தொலைக்காட்சி யுடெல்சாட்9எ@9.0E தொடக்கம்

நண்பர்களே ஐரோப்பா நர்டுகளில் வாழும் தமிழர்களின் பொழுதுபோக்கு அம்சமாக 24மணி நேர தமிழ் ஆன்மிக நிகழ்ச்சிகளை வழங்ககூடிய ஓம் கார தொலைக்காட்சியை இங்கிலாந்து நாட்டின் அம்(AUM NETWORK UK) தொலைக்காட்சி ஒளிபரப்பு குழுமம் புதிதாக யூடெல்சாட்9எ@9.0E 
செயற்கைகோளில் பாரிசார்ந்த ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.தமிழர்களின் ஆன்மிக தொடர்பான அனைத்து விதமான நிகழ்வுகளையும்.மற்றும் உலகளவில் உள்ள புனித இந்து ஆலயங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்குகிறது இப்புதிய ஓம்கார ஆன்மிகதொலைக்காட்சி.மிக எளிய தொழில்நுட்பமான MPEG2/DVB S1வடிவத்தில் தொடங்கப்பட்டுள்ளது ஐரோப்பா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் இத் தொலைக்காட்சியை 90CM அளவுள்ள கேயூ டிஷ் அன்டெனா முலம் இலவச ஒளிபரப்பாக காணகூடியதாக உள்ளது.
                                                                                                  புகைப்படம் வேல்பாண்டி
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate      11919
Symbol Rate  27500
Polar             Vertical
Modulation    Mpeg/dvb s1  

27/10/2014

சி மியூசிக் ஹெச்டி(C MUSIC TV HD) புதிய ஐரோப்பிய மியூசிக் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆசியாசாட்5@100.5Eயில் தொடக்கம்

நண்பா்களே ஐரோப்பிய நாட்டுகளில் மிகபிரபலமடைந்க இசை ஆல்ப பாடல்களை வழங்கும் இங்கிலாந்து நாட்டின் சி மியூசிக் நிறுவனத்தின் 
செயற்கைகோள் தொலைக்காட்சியான சி மியூசிக் ஹெச்டி முதன்முறையாக ஆசியா நாடுகளுக்கான ஒளிபரப்பை ஆசியாசாட்5 செயற்கைகோளில் மிக அதிநவின தொழில்நுட்பமான ஹெச்டி வடிவத்தில் தொடங்கியுள்ளனா்.இத்தொலைக்காட்சியின் ஒளிபரப்பு முதன்முதலாக அமெரிக்கா மற்றும் ஐரோப்ப நாடுகளில் தொடங்கப்பட்டது.இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆல்ப பாடல்கள் அனைத்தும் பின்னிபாடகா்கள் அற்ற இசை தொகுப்பாகும்.தொலைக்காட்சி தொடங்கியிருப்பது ஆசியாசாட் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் ஒளிபரப்பாகிறது.முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்;
Freq Rate         4040
Symbol Rate     29720
Polar                Horizontal
Modulation       HD.Mpeg4/Dvb s2
Mode               Fta

25/10/2014

துபாய் ஹாலோ பன்பலை 106.5(RADIO SALAAM FM UAE) புதிய அலைவரிசையில் ஹாலோ சலாம் பெயரில் அமிரகத்தில் தொடக்கம்

நண்பர்களே அரேபிய நாடுகளில் பணிபுரியும் தமிழா்களின் பொழுது போக்கு அம்சமாக இந்தியாவின் தமிழ் வானொலி சேவை நிறுவனமான ஹாலோ எப்எம் மற்றும் துபாய் நாட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான புஜராத்தும் இணைந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கியுள்ள வானொலி சேவையான ஹாலோ எப்எம்யை 89.5 அலைவரிசையில் துபாயில் அமிரகத்தில் தொடங்கியது.இப்பன்பலை சிறப்பான நிகழ்ச்சிகளை தமிழகத்தை போன்று வழங்கி வந்தது.தமிழகத்தில் ஹாலோ பன்பலை நேயர்களிடம் பெற்ற ஆதரவை போன்று துபாய் ஹாலோ எப்எம் துபாய் 
தமிழர்களிடம் வரவேற்பை பெற்றது.வானொலி துபாய் நாட்டின் அமிரகத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.தற்சமயம் ஹாலோ எப்எம் நிறுவனம் தெலுங்கு மொழியில் புதிய பன்பலையை தொடங்கியுள்ளது. இப்புதிய ஹாலோ எப்எம் தெலுங்கு தற்சமயம் ஒளிபரப்பாகி வரும் தமிழ் பன்பலையான ஹாலோ எப்எம் 89.5 அலைவரிசையில் மாற்றம் செய்யபடுவதையடுத்து.புதிய வடிவில் 24 மணி நேர தமிழ் நிகழ்ச்சிகளை புதிய அலைவரிசையான 106.5 யில் இனி ஹாலோ சலாம் என்ற பெயரில் கேட்டு மகிழலாம்.இம்மாற்றம் அக்டோபா் 26 திகதி முதல் தொடக்கியுள்ளது.துபாயில் தொடங்கிய முதல் தமிழ் வானொலி சேவை ஹாலோ எப்எம் நிறுவனத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வானொலி சேவைகள் இதுவாகும்.துபாயின் புதிய ஹாலோ சலாம் எப்எம் நிகழ்ச்சிகளை பாக்சாட்1ஆர் செயற்கைகோள் முலமாக உலகெங்கும் புஜராத் நிறுவனம் வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. 

19/10/2014

தினத்தா.சேனல்5.பிளிமி பாங்களா ஹெச்டி தொலைக்காட்சிகளின் புதிய ஒளிபரப்பு யூடெல்சாட்70பி@70.0E யில் தொடக்கம்

நண்பா்களே தெற்காசிய நாடுகளின் செயற்கைகோள் தொலைக்காட்சிகளான தினத்தா டிவி.பாங்களாதேஷ் நாட்டின் புதிய ஹெச்டி திரைப்பட தொலைக்காட்சியான சேனல்5.பிளிமி பாங்களா ஹெச்டி தொலைக்காட்சிகள் ஐரோப்பா நாட்டின் புதிய செயற்கைகோளான யூடெல்சாட்70பி@70.0E செயற்கைகோளில் கேயூ பேன்ட் தொழில்நுட்ப வடிவத்தில் சோதனை 
ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.இப்புதிய செயற்கைகோளின் ஒளிபரப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.தெற்காசிய நாடுகளை பொறுத்தமட்டிலும் மிக சாதரான கேயூ டிஷ் ஆன்டெனாவான 60செமீ அளவுள்ள டிஷ்யில் அலைவரிசை சிக்னல் கிடைக்கிறது.இப்புதிய அலைவரிசையில் மேலும் பல தெற்காசிய நாடுகளின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள ஒளிபரப்பு ஜொ்மனி நாட்டின் ஹரிசன் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்கப்பட்டுள்ளது.இவைகளின் ஒளிபரப்பு தற்சமயம் இலவச ஒளிபரப்பாகும் நிலையில் எவ்வித நேரங்களிலும் கட்டண தொலைக்காட்சிகளாக மாற்றப்படலாம்.
அலைவரிசை விபரங்கள்;
Freq Rate         11292
Symbol Rate     44995
Polar                 Horizontal
Modulation        Mpeg4/dvb s2
Mode                Fta

15/10/2014

ஆஸ்திரேலியா நெட்வொர்க் இந்திய தொலைக்காட்சி A பிளஸ் என்ற புதிய பெயரில் இன்டல்சாட்20@68.5E தொடக்கம்

நண்பர்களே ஆஸ்திரேலியா நாட்டின் எபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் உலகளாவிய ஔபரப்பு தொலைக்காட்சியான ஆஸ்திரேலியா நெட்வொர்க் தொலைக்காட்சி புதிய வடிவில் எ பிளஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.இப்புதிய பெயர்மாற்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்டது.இத்தொலைக்காட்சியின் செயற்கைகோள் 
ஒளிபரப்பான இன்டல்சாட்20யில் முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் இந்தியாவின் இலவச தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு சேவையான டிடி பிரி டிஷ் சேவையில் இலவச ஒளிபரப்பாக ஆஸ்திரேலியா தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.நிகழ்ச்சிகளில் எவ்வித மாற்றங்கள் இன்றி ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate         3788
Symbol rate      3616
Polar                Vertical
Modulation       Mpeg4/dvb s
Mode               Fta

04/10/2014

ஹாலிவுட் டிவி தைவான் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடக்கம் JCSAT3C@128.0E

நண்பர்களே தைவான் நாட்டை சார்ந்த ஆங்கில திரைப்படங்களை 24 மணிநேரம் ஒளிபரப்பு புதிய தொலைக்காட்சி ஹாலிவுட் டிவி என்ற பெயரில் 
ஜப்பான் நாட்டின் செயற்கைகோளானா JCSAT3Cயில் தொடங்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சியை பெறுத்தமட்டிலும் பிரபலமடைந்த ஆங்கில திரைகாவியங்களை ஒளிபரப்புகின்றது.தொலைக்காட்சி ஒளிபரப்பு அதிநவின தொழில்நுட்பமான MPEG4 /DVB S2 வடிவத்தில் கிடைக்கிறது.தொலைக்காட்சியின் செயற்கைகோள் அலைவரிசையை பெற குறைந்தபட்சம் 8.10.அளவுள்ள சி-
பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.முற்றிலும் மிக தாழ்வாக டிஷ் ஆன்டெனா கிழக்கு திசையை நோக்கி  கானப்படும்.தொலைக்காட்சி எவ்வித நேரங்களிலும் கட்டண தொலைக்காட்சியாக மாற்றமடையலாம்.தைவான் நாட்டு ஒளிபரப்பை சார்நத தொலைக்காட்சி ஆகும்.
அலைவரிசை விபரங்கள்;
Freq Rate         4160
Symbol Rate    30000
Polar                Vertical
Modulation       Mpeg4/dvb s2
Mode               Fta