சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

30/03/2015

ஐபிசி டிவி(IBC TAMIL TV UK) புதிய ஐரோப்பா தமிழ் தொலைக்காட்சி விரைவில் உதயம்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி ஐரோப்ப நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் பொழுது போக்கு மற்றும் உலகளாவிய தமிழ் மக்களின் நிகழ்வுகளை செய்திகளாக வானொலி முலமாக நிண்ட காலமாக வழங்கி வந்த ஐபிசி தமிழ் வானொலி நிறுவனம் முதன்முறையாக தங்களுடைய நிறுவனத்தின் சார்பாக புதிய ஐரோப்பிய தமிழ் தொலைக்காட்சி ஐபிசி என்ற பெயரில் தொடங்கவுள்ளனர்.இப்புதிய தமிழ் தொலைக்காட்சி இங்கிலாந்து நாட்டில் 
இருந்து ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.வரும் சித்திரை தமிழ் புத்தாண்டு முதல் தனது முதல் செயற்கைகோள் ஒளிபரப்பை ஹாட்பிரிட் அல்லது யுடெல்சாட்9எ செயற்கைகோளில் தொடங்கபடவுள்ளது.ஐரோ்ப்பா நாட்டை பொருத்தமட்டிலும் தமிழ் மக்களுக்கான பொழுதுபோக்கு தமிழ் தொலைக்காட்சிகளாக ஆதவன் டிவி.தீபம் டிவி.குலோபல் விஷன் டிவி போன்றவை செயல்பட்டுவருகிறது.இலங்கை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை அன்றாட செய்திகளாக இத்தொலைக்காட்சிகள் வழங்குகிறது.தொலைக்காட்சிகான பரிசார்ந்த ஒளிபரப்பு விரைவில் தொடங்கப்படும்.ஐரோப்பா மற்றும் வளைகுடா நர்டுகளில் தொலைக்காட்சியை காண குறைந்தபட்சம் 60செமீ முதல் 120செமீ அளவுள்ள கேயூ டிஷ் ஆன்டெனாவை பாவிக்க வேண்டும்.அதே போன்று MPEG2/DVB S1 தொழில்நுட்ப செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தி தொலைக்காட்சியை காணலாம்.தமிழகத்தில் காண 10 முதல் 12 அடி கேயூ ஆப்செட் டிஷ் பயன்படுத்தலாம். 
மேலதிக தொடர்புக்கு:
ஐபிசி தமிழ் தொலைக்காட்சி
லண்டன் தமிழ் மீடியா லிமிட்,
யூனிட் 1.ஷ்டேன்பில்ட் வே,
ருசிலிப்,
மிடில்செக்ஸ்,
ஹெச் எ 4 0ஜெஎஸ்
தொலைப்பேசி ; 02088631837
மின்னஞ்சல் ; info@ibctamil.tv

26/03/2015

ராஜேஸ் மூவிஸ் ஆப்பிரிக்கா(RAJESH MOVIE TAMIL AFRICA TV) தமிழ் தொலைக்காட்சி என்எஸ்எஸ்7 தொடக்கம்

நண்பர்களே ஆப்பிரிக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் வாழும் தமிழ்ர்களின் பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியை ஆல்டின் நெட்வொர்க் நிறுவனத்தின் ஒளிபரப்பு முனையத்தின் முலமாக ராஜேஷ் மூவிஸ் என்ற பெயரில் புதிய தமிழ் திரைப்பட தொலைக்காட்சியை அந்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் தற்சமயம் 
முன்னோட்ட ஒளிபரப்பு என்எஸ்எஸ்7 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.ஆப்பிரிக்க நாட்டின் தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி இதுவாகும்.தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பாக என்எஸ்எஸ்7  செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் இத்தொலைக்காட்சியை காண 10 முதல் 12 அடி கேயூ ஆப்செட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.ஆனால் ஆப்பிரிக்கா நாட்டுகளில் 90 முதல் 120 செமீ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.மிக சாதரான MPEG2/DVB S செட்டாப் பாக்ஸில் தொலைக்காட்சியை காணலாம்.இப்புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் செயற்கைகோளின் அலைவரிசை சிக்னல் மிக குறைந்த அளவே தமிழகத்தில் கிடைக்கிறது.படங்கள்: தம்பிதுரை நைஜிரியா
அலைவரிசை விபரங்கள்;
Satellite                   NSS7@57.0E(ku-band)
Freq Rate                11554
Symbol Rate            3300
Polar                        Horizontal
Modulation               Mpeg2/Dvb s1
Mode                       Fta

22/03/2015

வீவ் வேல்ட்.கீன்ஸ் சாங் தொலைக்காட்சிகள் தாய்காம்5 தொடக்கம்

நண்பர்களே தாய்லாந்து நாட்டின் மிக முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஐபிஎம் தனது நிறுவனத்தின் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை தாய்லாந்து நாட்டின் தாய்காம்5 செயற்கைகோளின் முலம் புதிய அலைவரிசையில் தொடங்கியுள்ளது.இவற்றில் பயனுள்ள பொழுது போக்கு மற்றும் அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை வீவ் வேல்ட என்னும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள தொலைக்காட்சியில் 
ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் தாய் மொழியில் ஒளிபரப்பாகிறது.இதே போன்று மற்றொரு ஐபிஎம் நிறுவன தொலைக்காட்சி கீன்ஸ் சாங் என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. இவ்விறு தொலைக்காட்சிகளும் முற்றிலும் இலவச தொலைக்காட்சிகளாக தாய்காம்5 செயற்கைகோளில ஒளிபரப்பாகிறது.மிக சாதரான 6 அடி டிஷ் ஆன்டெனா முலம் தொலைக்காட்சிகளின் அலைவரிசைகளை பெறலாம்.MPEG2/DVB S1 செட் டாப் பாக்ஸ் பயன்படுத்தி காணலாம்.தமிழகம் மற்றும் கிழக்காசிய நாடுகளிலும் அலைவரிசை சிக்னல் எளிதாக கிடைக்கும்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                 Thaicom5@78.5E (C-Band)
Freq Rate              3950
Symbol Rate          2550
Polar                      Vertical
Modulation             Mpeg2/Dvb s1
Mode                     Fta

10/03/2015

தென்றல் டிவி புதிய தமிழ் தொலைக்காட்சி இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி நீண்ட கால இடைவெளிகளுக்கு பிறகு புதிய தமிழ் தொலைக்காட்சிதென்றல் டிவி என்னும் பெயரில் ஒளிபரப்பு  தமிழகத்தில் தொடங்கியுள்ளது.தற்சமயம் தொடங்கியுள்ள தென்றல் டிவியின்  ஒளிபரப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு இடைநிறுத்தம் 
செய்யப்பட்ட தென்றல் டிவி செயற்கைகோள் ஒளிபரப்பு உரிமத்தில் இப்புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு சென்னை டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்கப்பட்டுள்ளது.தற்சமயம் திரைப்பட பாடல்களுடன் ஒளி உலா வருகிறது.இத்தொலைக்காட்சியை பொறுத்தமட்டிலும் பொழுது போக்கு 
தொடரபான நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சியாக செயல்படலாம்.தென்றல் டிவியின் அலைவரிசையை பெற குறைந்தபட்சம் 6  முதல் .8.10.12 டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.தொலைக்காட்சியை காண MPEG4/DVBS2 செட் டாப் பாக்ஸை பயன்படுத்த வேண்டும்.தொடர்புக்கு;82 20 59 11 19
அலைவரிசை விபரங்கள்:
Satellite                Intelsat17@ 66.0E
Freq Rate               3967
Symbol Rate          14400
Polar                      Horizontal
Modulation             Mpeg4/Dvb s2
Mode                     Fta

08/03/2015

ஐரோப்ப செயற்கைகோள் தமிழ் தொலைக்காட்சி மற்றும் வானொலி

நண்பர்களே இன்றைய அதிநவின காலத்தில் உலகின் அனைத்து பகுதிகளிலும் தமிழ் மக்கள் வசிக்கின்றனர்.அவற்றில் ஐரோப்ப நாடுகளில் அதிக தமிழ் மக்கள் வசிக்கின்றனர்.இவற்றில் இலங்கை மற்றும் இந்திய வ்ம்சவளி தமிழ் மக்கள் அதிகம் பேர் வசிப்பது குறிப்பிடதக்கது.இதை தவிர பணிபுரிய செல்வோர்களும் அடங்கும்.தங்கள் வசிக்கும் இடங்களில் பொழுது போக்கு தொடர்பான நிகழ்ச்சிகளையும் உலகின் மற்ற இடங்களில் இருக்கும் நடக்கும் தமிழ்ர்களின் அன்றாட நிகழ்வுகளை அறிய தரும் ஐரோப்ப தொலைக்காட்சிகளாக செயல்பாடுகின்றன.தமிழ் மக்களின் பொழுது போக்கு தொடர்பான நிகழ்ச்சிகளை செயற்கைகோளின் யுடாக தொலைக்காட்சி மற்றும் வானொலி என ஐரோப்ப தமிழ் மீடியா நிறுவனங்கள் நடத்தி வருகிறது.இவற்றில் 
1.ஆதவன் டிவி
2.தீபம் டிவி
3.டான் யாழ் ஒளி
4.ஐயங்காரன் டிவி
5.குளோபல் தமிழ் விஷன் (ஜிடிவி)
6.சன் டிவி.சன் மீயூசிக்.கேடிவி
7.விஜய் டிவி இன்டர்நேஷனல்
8.என் எல் எம் டிவி
9.ஏஜ்ஜல் டிவி
10.ஹோலி காட் டிவி
11.ஐபிசி வானொலி
12.யூரோப்ப தமிழ் வானொலி
13.டிஆர் டி வானொலி
இத்தொலைக்காட்சிகளில் சன் மற்றும் விஜய் டிவி நிகழ்ச்சிகள் மட்டும் கட்டண தொலைக்காடசிகளாக உள்ளது.மற்ற தொலைக்காட்சிகள் இலவச தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகிறது.யூடெல் சாட்9எ@9.0E செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.இவற்றை காண மிக சிறிய அளவுள்ள கேயூ 60 முதல் 90 செமி டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி ஐரோப்ப மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் இத்தொலைக்காட்சிகளை காணலாம்.மிக எளிய தொழில் நுட்ப செட் டாப் பாக்ஸ் MPEG2/DVB S1 பயன்படுத்தி காணலாம்.இது தொடர்பான மேலதிக தொழில்நுட்ப விபரங்களை பெற்றிட அழையுங்கள்(+91 9659513624).அல்லது மின்னஞ்சல் (k.sathees907@gmail.com).தமிழகத்தில் காண வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 10 அடி அளவுள்ள கேயூ ஆப்செட் டிஷ் ஆண்டெனா பயன்படுத்த வேண்டும்.வடஇந்தியாவை பொறுத்தமட்டிலும் 120செமீ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.