சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

28/04/2015

வசந்தம் டிவி லங்கா தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு SES7யில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி டிடிஎச் நிறுவனமான டிஷ்டிவி புதிதாக இலங்கை நாட்டில் டிஷ்டிவி லங்கா என்ற பெயரில் புதிய டிடிஎச் சேவையை கடந்த வருடத்தில் தொடங்கியிருந்தனர்.இப்புதிய டிடிஎச் சேவையில் இலங்கை நாட்டின் தொலைக்காட்சிகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் 
தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு கடந்த ஆண்டு முதல் புதிய செயற்கைகோளான SES7யில் தொடங்கப்பட்டது.தற்சமயம் இலங்கை நாட்டின் அரசு தொலைக்காட்சியான சுயதின குழுமத்தின் தமிழ் மற்றும் சிங்களா தொலைக்காட்சிகள் ஸ்ரீ லங்கா டிவி(ஐடிஎன்).வசந்தம் டிவி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு சியாதா நிறுவன தமிழ் தொலைக்காட்சியான வர்ணம் டிவி ஒளிபரப்பு தொடங்கியிருந்தது 
குறிப்பிடதக்கது.இலவச ஒளிபரப்பாகும் இத்தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகளாக எவ்வித நேரங்களிலும் மாற்றாப்படலாம்.தொலைக்காட்சிகளின் டிடிஎச்ஒளிபரப்பு இலங்கை நாட்டிற்கு மட்டுமே.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                      SES7@95.0E(ku-band)
Freq Rate                   12172
Symbol rate                 40700
Polar                           Horizontal
Modulation                  Mpeg2/dvb s1
Mode                          FTA/PAY 

24/04/2015

வர்ணம் டிவி லங்கா தமிழ் திரைப்பட தொலைக்காட்சி டிஷ்டிவி லங்காவில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் மிக முன்னனி டிடிஎச் ஒளிபரப்பு நிறுவனமான டிஷ்டிவியின் ஆசிய நாடுகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு அலைவரிசையில் பாகிஸ்தான்.பாங்களதேஷ் மற்றும் இலங்கை நாட்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இத்தொலைக்காட்சிகள் இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இதனில் 
இலங்கை நாட்டின் தமிழ் திரைப்பட மற்றும் சிங்கள மொழி தொலைக்காட்சிகளான வர்ணம் டிவி மற்றும் சுவர்னவாஹினி போன்ற தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை புதிதாக டிஷ்டிவி லங்கா டிடிஎச்யில் தொடங்கியுள்ளனர்.இப்புதிய டிடிஎச் ஒளிபரப்பில் சக்தி டிவி.தெர்னா மற்றும் 
சில முன்னனி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.தற்சமயம் தொடங்கியுள்ள இப்புதிய இரண்டு தொலைக்காட்சிகளின் இலவச ஒளிபரப்பு எவ்வித நேரங்களிலும் நிறுத்தப்படலாம்.இது டிடிஎச் நிறுவனத்தின் தொடக்க சோதனை ஒளிபரப்பு என்பது குறிப்பிடதக்கது.தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு SES7@95.0Eயில் தொடங்கியுள்ளனர். 
அலைவரிசை விபரங்கள்:
Satellite                           SES7@95.0E
Freq Rate                        12172
Symbol Rate                    40700
Polar                                Horizontal
Modulation                       Mpeg2/dvb s1
Mode                               PAY/FTA

ஸ்டார் விஜய் ப்ளஸ்(STAR VIJAY PLUS TV) புதிய தமிழ் தொலைக்காட்சி தமிழகத்தில் விரைவில் உதயம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளை ஒளிபரப்பி வரும் நிறுவனமான ஸ்டார் டிவி இந்தியா தமிழ் மொழியில் புதிய பொழுதுபோக்கு தொலைக்காட்சியை விரைவில் தொடங்கப்படவுள்ளது.தமிழகம் மட்டும் அல்லாது வெளிநாடுகளிலும் மிக பிரபலமடைந்த முன்னனி தமிழ் தொலைக்காட்சியாக ஸ்டார் விஜய் டிவி திகழ்ந்துவருகிறது.தமிழ் மொழியில் மிக பிரபலமடைந்த நிகழ்ச்சிகளை வழங்கி அதிக தமிழ் பார்வையாளர்களை பெற்ற விஜய் டிவி தனது குழுமத்தில் இருந்து விஜய் டிவி ப்ளஸ் என்னும் தொலைக்காட்சியை விரைவில் 
தொடங்கவுள்ளனர்.இப்புதிய தொலைக்காட்சிகான ஒளிபரப்பு அனுமதி மத்திய ஒளிபரப்பு ஆணையத்திடம் இருந்து கிடைக்கும் பட்சத்தில் இவ்வாண்டு இறுதிக்குள் ஒளிபரப்பை தொடங்கலாம் ஸ்டார் விஜய் ப்ளஸ் டிவி.ஸ்டார் டிவி நிறுவனத்தின் மற்ற மாநில மொழி தொலைக்காட்சிகளில் இரு பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தமிழகத்தில் விஜய் தொலைக்காட்சியில் மட்டும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.தமிழகத்தை பொறுத்தமட்டிலும் தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தாலும் அனைத்தும் கட்டண தொலைக்காட்சிகளாகவே தொடங்கப்படுகிறது.ஸ்டார் டிவி நிறுவனத்தின் தென் மாநில தொலைக்காட்சிகளின் உலகளாவிய ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது குறிப்பிடத்தக்கது.விஜய் டிவி நிறுவனத்தில் தொடங்கப்படும் முன்றாவது தமிழ் தொலைக்காட்சி இதுவாகும்.
தொகுப்பு: சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

23/04/2015

ஐபிசி டிவி ஐரோப்ப தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு யூடெல்சாட்9எயில் உதயம்

நண்பர்களே இங்கிலாந்து நாட்டின் அனைத்துலக கூட்டுதாபன ஒளிபரப்பு நிறுவனத்தின் புதிய ஐரோப்ப தமிழ் தொலைக்காட்சியான ஐபிசியின் செயற்கைகோள் பரிசார்ந்த ஒளிபரப்பு யூடெல்சாட்9எ  செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியில் தமிழ் திரைப்பட மற்றும் செய்திகள் போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.இப்புதிய தொலைக்காட்சி தொடர்பான விபரங்களை பற்றி நமது தளத்தில் கடந்த மாதத்தில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது.இலவச தொலைக்காட்சியாக தனது ஒளிபரப்பை யூடெல்சாட்9எ செயற்கைகோளில் ஐபிசி தமிழ் தொடங்கியுள்ளது. 
அலைவரிசை விபரங்கள்
Satellite                     Eutelsat9A@9.0E(KU-BAND)
Freq Rate                  11729
Symbol Rate              27500
Polar                          Vertical
Modulation                 Mpeg2/dvb s1
Mode                         Fta

18/04/2015

சகாரா கட்டண தொலைக்காட்சிகள் இலவச தொலைக்காட்சியாக ஆசியாசாட்7யில் ஒளிபரப்பு

நண்பர்களே இந்தியாவின் முன்னனி நிறுவனமான  சகாரா தனது ஹிந்தி மொழி பொழுது போக்கு தொலைக்காட்சிகளை இலவச தொலைக்காட்சிகளாக மாற்றம் செய்துள்ளது.இந்நிறுவனத்தின் செய்திகள் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட தொலைக்காட்சிகளை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு ஆசியாசாட்7 செயற்கைகோளில் 
ஒளிபரப்பாகி வந்தது.இவற்றில் செய்திகள் தொலைக்காட்சியை தவிர்த்து சகரா ஒன்.பிளிமி.பீரான்கிபோன்ற தொலைக்காட்சிகளை கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகி வந்தது.தற்சமயம் இம்மூன்று தொலைக்காட்சிகளும் இலவச தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பை அந்நிறுவத்தின் செயற்கைகோள் அலைவரிசையில் தொடங்கியுள்ளது.வடமாநிலங்களை பொறுத்தமட்டிலும் கடந்த சில 
வருடங்களில் புதிய திரைப்பட தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.மேலும் முன்னனி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனகளும் பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட தொலைக்காட்சிகளை தொடங்கிவருவதும் குறிப்பிடதக்க செய்தியாகும்.சகரா நிறுவன தொலைக்காட்சிகளை மிக எளிய தொழில்நுட்ப MPEG2/DVB S1 செட் டாப் பாக்ஸ்யில் காணலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                  Asiasat7@105.0E (C-BAND)
Freq Rate              4021
Symbol Rate          27250
Polar                     Vertical
Modulation            Mpeg2/Dvb s1
Mode                    Fta

13/04/2015

கேப்டன் டிவி தொலைக்காட்சி டிஷ்டிவி டிடிஎச்யில் இலவச தொலைக்காட்சியாக தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி டிடிஎச் ஒளிபரப்பு நிறுவனமான டிஷ் டிவியின் தமிழ் தொலைக்காட்சிகளின் வரிசையில் கேப்டன் மீடியா நிறுவனத்தின் தமிழ் தொலைக்காட்சியான கேப்டன் டிவியின் ஒளிபரப்பை புதிதாக தொடங்கியுள்ளது.கடந்த சில நாட்களாக இலவச 
தொலைக்காட்சியாக கேப்டன் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.டிஷ்டிவியில் முதன்முதலாக ஒளிபரப்பை கேப்டன் தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக என்எஸ்எஸ்6 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கியிருந்தது குறிப்பிடதக்கது.இத்தொலைக்காட்சியின் இலவச ஒளிபரப்பில் எவ்வித மாற்றங்களும் நிகழலாம்.
அலைவரிசை விபரங்கள்
Satellite                      SES7@95.0E(ku-band)
Freq Rate                   12112
Symbol Rate               40700
Polar                           Horizontal
Modulation                  Mpeg2/Dvb s1
Mode                          Fta 

08/04/2015

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை மலேசிய தமிழ் தொலைக்காட்சி புதிய அலைவரிசைக்கு மாற்றம்

நண்பர்களே மலேசிய நாட்டின் ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் 24 மணி நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சியான ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை தற்சமயம் ஒளிபரப்பாகும் மலேசியா நாட்டின் தகவல் தொடர்பு செயற்கைகோளான மீயாசாட்3/3எ யில் இருந்து புதிய அலைவரிசையில் தனது ஒளிபரப்பை 
தொடங்கியுள்ளது.ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை தொலைக்காட்சியின் முதல் செயற்கைகோள் ஒளிபரப்பு 4120 அலைவரிசையில் மீயாசாட் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் மலேசியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளுக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது.ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை தொலைக்காட்சி தற்சமயம் தொடங்கிய புதிய அலைவரிசை ஒளிபரப்பு கட்டண 
தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.இதனுடன் ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் மற்றொரு மலயே மொழி தொலைக்காட்சியான ஆஸ்ட்ரோ வர்ணா தொலைக்காட்சியும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.தொலைக்காட்சிக்கான அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 முதல் 10.12 அளவுள்ள சிபேனட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                          Measat3/3A@91.2E(C-BAND)
Freq Rate                       3728
Symbol Rate                  9833
Polar                              Horizontal
Modulation                    Mpeg4/Dvb S2
Mode                             Pay/Power uv

07/04/2015

சோனி கிஸ் தொலைக்காட்சியில் பெப்சி ஐபிஎல் தொடர்கள் தமிழ் வருணையில் ஒளிபரப்பு

நண்பர்களே இந்தியா மற்றும் உலக நாடுகளின் நட்சத்திர மட்டைபந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் மிக பிரபலமான மட்டைபந்து தொடர்ரான பெப்சி ஐபிஎல் போட்டி தொடர்களை முதன்முறையாக தமிழ் மொழியில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது சோனி குழுமத்தின் புதிய தொலைக்காட்சியான சோனி கிஸ் டிவி.இப்புதிய தொலைக்காட்சி கடந்த மாதத்தில் செயற்கைகோள் ஒளிபரப்பை இன்டல்சாட்20@68.0E யில் தொடங்கியிருந்தது குறிப்பிடதக்கது.இப்போட்டி தொடர்களை சோனி நிறுவனத்தின் விளையாட்டு  
தொலைக்காட்சியான சோனி சிக்ஸ்யில் ஆங்கிலத்திலும்.சோனி மேக்ஸ்யில் ஹிந்தி மொழியிலும் ஒளிபரப்புகிறது.சோனி நிறுவனம் கடந்த வருடங்களில் நடைபெற்ற ஐபிஎல் மட்டைபந்து போட்டி தொடர்களை ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டு்ம் இந்தியாவில் ஒளிபரப்பி வந்தது.சோனி நிறுவனத்தின் புதிய முயற்ச்சியாக தமிழ் மட்டைபந்து ரசிகர்களின் வரவேற்பை பெறும் வகையில் இப்புதிய தொலைக்காட்சியை தமிழகத்தில் களம் இறக்கியுள்ளது.இதே போன்று தற்சமயம் நடைபெற்ற உலககோப்பை போட்டி தொடர்களை தமிழ் மொழியில் ஸ்டார் டிவி நிறுவனத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி வழங்கியிருந்தது குறிப்பிடதக்கது.இப்புதிய தொலைக்காட்சி மற்ற டிடிஎச் மற்றும் கேபிள் டிவி நிறுவனங்களில் விரைவில் ஒளிபரப்பு தொடங்கலாம்.இன்டல்சாட்20 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.

03/04/2015

சோனி கிஸ் புதிய ஆங்கில திரைப்பட தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் மிக முன்னனி பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளை ஒளிபரப்பும் சோனி என்டர்டெய்மென்ட் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் புதிய ஆங்கில திரைப்பட தொலைக்காட்சி சோனி கிஸ் என்ற பெயரில் தொடங்கியுள்ளனர்.தொலைக்காட்சிகான முன்னோட்ட ஒளிபரப்பு சோனி நிறுவனத்தின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் செயற்கைகோள் அலைவரிசையில் தொடங்கப்பட்டுள்ளது.கட்டண 
தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகும் சோனி கிஸ் தொலைக்காட்சியில் ஆங்கில அதிரடி மற்றும் வித்தியாசமான ஆங்கில கேம் ஷோ போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்படுகிறது.சோனி நிறுவனத்தின் இரண்டாவது ஆங்கில திரைப்பட தொலைக்காட்சி இதுவாகும்.இந்தியாவை பொறுத்தமட்டிலும் புதிய பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளை தொடங்குவதில் ஸ்டார் மற்றும் ஜி நிறுவனங்களுக்கு அடுத்த வரிசையில் சோனி நிறுவனம் களம் இறங்கியுள்ளது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                      Intelsat20@68.5E(C-BAND)
Freq Rate                  3900
Symbol Rate              22220
Polar                          Horizontal
Modulation                 Mpeg4/Dvb s2
Mode                         Pay/Power uv