சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

30/07/2015

நெக்ஸ்ட் டிஜிட்டல் டிவி(NXT DIGITAL TV) புதிய மல்டி கேபிள் டிவி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்

நண்பர்ளே இந்தியாவில் இரண்டாவதாக புதிய செயற்கைகோள் முலம் கேபிள் டிவி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தொலைக்காட்சிகளை வழங்கும் புதிய நிறுவனம் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற பெயரில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இப்புதிய நிறுவனத்தின் செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் 6 தொலைக்காட்சிகளுடன் தொடங்கியுள்ளனர்.இந்தியாவின் இந்துஜா நிறுவனத்தின் சார்பாக இப்புதிய 
தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இந்தியாவின் அனைத்து முன்னனி மொழி தொலைக்காட்சிகள் என 500  தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர்.மேலும் அதிநவின தொழில்நுட்பமான ஹெச்டி தொலைக்காட்சிகளை இப்புதிய ஒளிபரப்பின் முலம் வழங்கவுள்ளனர்.ஜெயின் ஹிட்ஸ் முதன்முதலாக இந்தியாவில் தொடங்கிய மல்டி கேபிள் டிஜிட்டல் டிவியாகும்.நெக்ஸ்ட் டிஜிட்டல் டிவியின்
ஒளிபரப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஒளிபரப்பை இன்டல்சாட்20யில் தொடங்கவுள்ளனர்.தொலைக்காட்சிகள் அனைத்தும் கட்டண தொலைக்காட்சிகளாக தொடங்கப்பட்டுள்ளது.இந்நிறுனத்தின் அலைவரிசை சிக்னலை பெற 10 அடி முதல் 16 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.இது கேபிள் டிவி நிறுவனத்தில் மட்டுமே தொலைக்காட்சிகளை ஒளிபரப்பும் தொழில்நுட்ப நிறுவனம் என்பது குறிப்பிடதக்க செய்தியாகும்.
அலைவரிசை விபரங்கள்
Satellite                   Intelsat20@68.5E
Freq Rate                4012
Symbol Rate            7120
Polar                        Vertical
Modulation               Mpeg4/Dvb s2
Mode                       Pay/Nagravision

23/07/2015

என்எல்எம் டிவி(NLM TV TAMIL) புதிய ஐரோப்பிய கிருத்துவ தமிழ் தொலைக்காட்சி ஆசியா நாடுகளுக்கு ஆசியாசாட்5யில் தொடக்கம்

நண்பர்களே ஆசியா நாடுகளாக்கான புதிய கிருத்துவ தமிழ் தொலைக்காட்சி என்எல்எம் டிவி செயற்கைகோள் ஒளிபரப்பை புதிதாக ஆசியாசாட்5 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.இலங்கை நாட்டின் பாலம் புராசெக்ட் மற்றும் நியூ லிவ்விங் மினிஷ்டிரி நிறுவனத்தின் கிருத்துவ தமிழ் தொலைக்காட்சியாகும். இத்தொலைக்காட்சியின் ஒளிபரப்பு முதன்முதலாக ஐரோப்பிய மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் யூடெல்சாட9எ 
செயற்கைகோளில் தொடங்கப்பட்டது.இத்தொலைக்காட்சியில் 24 மணி நேர தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கிருத்துவ ஊழியம் ம்ற்றும் குழந்தைகள் மற்றும் பல வகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.ஆசியா நர்டுகளிலும் என்எல்எம் டிவியின் நிகழ்ச்சிகளை வழங்க இப்புதிய ஒளிபரப்பு சாட்லிங் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்கப்பட்டுள்ளது. என்எல்எம் தொலைக்காட்சியினை காண குறைந்தபட்சம் 6 முதல் 8.10.12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட்டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.விரைவில் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் தொடங்கும்.
அலைவரிசை விபரங்கள்
Satellite                  Asiasat5@100.5(C-band)
Freq Rate              3960
Symbol Rate          30000
Polar                      Horizontal
Modulation             Mpeg4/Dvb s2
Mode                     FTA

16/07/2015

இந்தியாவில் நாப்டால் ஷாப்பிங் தமிழ்.ஹிந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் இன்டல்சாட்20யில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் மிக பெரிய ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி டெலிஷாப்பிங் நிறுவனமான நாப்டால் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் தங்களின் நிறுவன தொலைக்காட்சிகளை தொடங்கி வருகிறது. இந்தியாவை பொறுத்தமட்டிலும் தொலைக்காட்சியை கானும் பார்வையாளார்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக அதிகரித்துள்ளது.இதன் 
அடிப்படையில் தொலைக்காட்சியின் முலம் தங்கள் நிறுவனத்தின் ஷாப்பிங் பொருட்கள் நேரடியாக இடைதரகர்கள் இன்றி விட்டிற்கே அனுப்புகின்றன.மேலும் பொருட்களின் விலையும் கணிமான விலைகளில் இருப்பதால் மக்கள் அதிகம் தொலைக்காட்சிகளின் பொருட்கள் வாங்குவதை விரும்புகின்றனர்.நாப்டால் நிறுவனம் முதன்முறையாக தமிழ்நாடு மற்றும் கேரளா தென் மாநிலங்களில் தங்கள் நிறுவனத்தின் தொலைக்காட்சிகளை 
தொடங்கியுள்ளனர்.வட மாநிலங்களின் ஹிந்தி மொழிகளிலும் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்தொலைக்காட்சிகள் இலவச ஒளிபரப்பாக இன்டல்சாட்20@68.5 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.இந்தியாவில் இதே போன்று ஷாப்பிங் ஜின் மற்றும் பெஸ்ட் டில் மற்றும் பல நிறுவனங்கள் செயற்கைகோள் தொலைக்காட்சிகளை தொடங்கி வருகிறது.விரைவில் ஆந்திர.தெலுங்கான 
மற்றும் கர்நாடகம் மாநிலங்களிலும் தொலைக்காட்சிகள் தொடங்கப்படலாம்.
செயற்கைகோள் அலைவரிசை விபரங்கள்
1.புளு நாப்டால் ஹிந்தி 
2.எம்ஜிகே நாப்டால் தமிழ்
Satellite           Is20@68.5E(C-BAND)
Freq rate        3790
Symbol Rate  7200
Polar              Horizontal     
3.தாரமா சன்ஹீட் நாப்டால் மலையாளம்
Satellite           Is20@68.5E(C-BAND)
Freq rate        4185
Symbol Rate  21600
Polar              Vertical  

11/07/2015

பிரசார் பாரதியின் விளையாட்டு.வேளாண்மை.கல்வி தொலைக்காட்சிகள்

நண்பர்களே இந்தியா அரசுவின் பொது ஒளிபரப்பு தொலைக்காட்சி நிறுவனமான பிரசார் பாரதி தொலைக்காட்சி இந்திய மக்களின் பொழுதுபோக்கு மற்றும் இந்திய பாரம்பாரியம் போன்ற நிகழ்ச்சிகளை வழங்ககூடிய மிக முன்னனி கலச்சார மற்றும் விளையாட்டு.வேளாண்மை.கல்வி போன்ற துறைகளில் தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளது.அந்த வரிசையில் விளையாட்டு 
தொலைக்காட்சியான டிடிஸ்போர்ட்ஸ் தொடங்கப்பட்டு உள்நாட்டில் நடைபெறும் விளையாட்டு தொடர்கள் மற்றும் ஒலிம்பிக்.ஆசியா நாடுகளில் நடைபெறும் தொடர்களையும் ஒளிபரப்பு செய்கிறது.அதே போன்று இந்திய மக்களின்  பாரம்பாரியம் மற்றும் கலச்சார தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சியா டிடி பாரதி தொடங்கப்பட்டுள்ளது.நாட்டில் வேளாண்மை துறையில் புதிய மாற்றங்களையும் தாங்கள் உற்பத்தி செய்யும் 
பயிர்களின் விலை மற்றும் பயிர் செய்யும் விபரங்களையும்.வானிலை மாற்றங்கள் போன்ற நிகழ்வுகளை இந்திய விவசாயிகள் தங்கள் இல்லங்களில் அறிந்து கொள்ள டிடி கிஷன் டிவி தொடங்க்ப்பட்டுள்ளது.நாட்டின் கல்வி வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் விட்டில் இருந்தபடியே பாடங்களை அறிந்து கொள்ள டிடி கயின்தர்ஷன் மற்றும் யுஜிசி போன்ற தொலைக்காட்சிகள தொடங்கியுள்ளது.இத்தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு டிடி பிரி டிடிஎச்யிலும் தொடங்க்ப்பட்டுள்ளது.இந்திய அரசு மேற்கண்ட தொலைக்காட்சிகளான டிடி 
பாரதி.டிடி கிஷன்.டிடி கயின்தர்ஷன் மற்றும் யுஜிசி ஆகியன இந்தியாவின் அனைத்து மொழி வாரியாக தொடங்கினால் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும்.இத்தொலைக்காட்சிகளில் ஹிந்தி மொழியில் மட்டும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.இந்திய அரசு பொது தொலைக்காட்சி துர்தர்ஷன் நிறுவனத்தின் அனைத்து தொலைக்காட்சிகளையும் பயன்படுத்துவோம்.நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்படுவோம்.
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ்

08/07/2015

தந்தி செய்திகள் தொலைக்காட்சி இரவு நேர நேரலை செய்திகள் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பர்களே இந்திய தமிழ் செய்திகள் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக 24 மணி நேரமும் நேரலை செய்திகள் ஒளிபரப்பை ஜிலை 6  திகதி முதல் தொடங்கியுள்ளது தமிழகத்தின் முன்னனி தமிழ் தொலைக்காட்சியான தந்தி தொலைக்காட்சி.கடந்த சில வருடங்களுக்கு 
முன்பு தொடங்கப்பட்ட இத்தொலைக்காட்சி தமிழ் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதையடுத்து இப்புதிய முயற்ச்சியில் இறங்கியுள்ளது தந்தி டிவி.தமிழகத்தை பொறுத்தமட்டிலும் செய்திகள் தொலைககாட்சிகள் வித்தியாசமான தொழில்நுட்பம் மற்றும் புதிய செயல்பாடுகளின் முலம் செய்திகளை வழங்க முயற்ச்சிகளை பேற்கொண்டு வருகிறது.தந்தி டிவியில் 
தொடக்க காலங்களில் காலை.பிற்பகல்.மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் செய்திகள் நேரலையாக நிகழ்வுகளை வழங்கி வந்தது.தற்சமயம் இரவு 12மற்றும் 2 மற்றும் 4 மற்றும் விடியற்காலை 6 வரை மாலை நேரங்களில் நடைபெறும் நிகழ்வுகளை வழங்குகிறது.தந்தி டிவி இங்கிலாந்து நாட்டின் பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்திகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு  தமிழகத்தில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.