சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

24/08/2015

துபாய் நாட்டின் கல்ப் டிவி மலையாளம் ஹெச்டி தொலைக்காட்சியில் தமிழ் பாடல்கள் ஒளிபரப்பு

நண்பர்களே வளைகுடா நாடுகளில் வாழும் இந்திய மக்களின் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளை அங்கு செயல்படும் இந்திய தொலைக்காட்சி நிறுவனங்கள்  தொடங்கி வருகிறது.அவ்வகையில் மலையாளம் மொழி 
தொலைக்காட்சிகள் தற்சமயம் தொடங்கப்பட்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை புதிய யூடெல்சாட்70பி செயற்கைகோளில் வழங்குகிறது.அதன் அடிப்படையில் புதிய ஹெச்டி தொலைக்காட்சி கல்ப் டிவி மலையாளம் கடந்த மாதத்தில் துபாயில் இருந்து தொடங்கப்பட்டது.அத்தொலைக்காட்சி மலையாளம் மொழியில் தொடங்கப்பட்ட முதல் ஹெச்டி வெளிநாட்டு 
தொலைக்காட்சியாகும்.இத்தொலைக்காட்சியில் மலையாளம் ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களின் பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னல் மிக குறைந்த அளவுள்ள கேயூ டிஷ் ஆன்டெனா முலம் கிடைக்க கூடியதாகவுள்ளது.தமிழ் பாடல் அனைத்தும் ஹெச்டி தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தற்சமயம் சோதனை ஒளிபரப்பு மட்டும் வழங்கி வரும் 
இத்தொலைக்காட்சியின் உலகளாவிய ஒளிபரப்பு விரைவில் தொடங்கப்படும்.கேரளா மாநிலத்தில் செயல்படும் ஈசல் சியாம் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் வளைகுடா நாடுகள் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இலவச தொலைக்காட்சியாக கல்ப் டிவி யூடெல்சாட்70பியில் செயல்படுகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                Eutelsat70B@70.5E(KU-BAND)
Freq Rate              11355
Symbol Rate         44900
Polar                      Vertical
Modulation            HD.MPEG4/DVB S2
Mode                     Fta

22/08/2015

தமிழ் பாடல்களை ஒளிபரப்பும் புதிய வானொலி ஒளிபரப்பு என்எஸ்எஸ்6@95.0 தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் டிஷ்டிவி டிடிஎச் நிறுவனத்தின் வானொலி ஒளிபரப்பில் புதிய தமிழ் பாடல்களை ஒளிபரப்ப கூடிய புதிய வானொலி சேவை தொடங்கப்பட்டுள்ளது.சோதனை ஒளிபரப்பாக தொடங்கப்பட்டுள்ள து.மேலும் இந்த சேவை ஒளிபரப்பில் ஹிந்தி மொழி பாடல்களை ஒளிபரப்பும் 
வானொலியும் இடம் பெற்றுள்ளன.டிஷ்டிவி நிறுவனத்தினால் ஒளிபரப்படும் இந்த வானொலி சேவையில் இடைவிடாத தமிழ் பாடல்கள் இடம்பெறுகிறது.இலவச வானொலியாக என்எஸ்எஸ்6 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.மிக எளிய தொழில்நுட்ப MPEG2/DVB S1 வடிவ செட் டாப் பாக்ஸ்யில் வானொலி சேவையை கேட்கலாம்.இந்த புதிய சேவையில் பல்வேறு ஆடியோ வரிசையில் தமிழ் ஒளிபரப்பை கேட்க ஆடியோ 9 தை மாற்றம் செய்து பாடல்களை கேட்கலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                   NSS6@95.0E(KU-BAND)
Freq Rate               12690
Symbol Rate            32700
Polar                        Horizontal
Modulation               Mpeg2/Dvb s1
Mode                       Fta 

15/08/2015

சிவம் டிவி(SIVAM TV TAMIL) புதிய ஆன்மிக தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு தமிழகத்தில் இன்டல்சாட்17யில் தொடக்கம்

நண்பர்களே தமிழகத்தில் புதிய பக்தி ஆன்மிக தமிழ் தொலைக்காட்சி சிவம் டிவி என்ற பெயரில் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.சிவம் தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு ஆந்திர மாநிலத்தின் ஆந்திரி என்ரிச்சி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு
உரிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடங்கப்படும் இரண்டாவது தமிழ் இந்து தொலைக்காட்சி இதுவாகும்.கடந்த வருடத்தில் இணையதள தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டது.தொலைக்காட்சியின் அலைவரிசை சிகனலை பெற குறைந்தபட்சம் 8 முதல் 10.12 அளவுள்ள சி பேன்ட் டிஷ்
ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழிலிநுட்ப பொருந்திய செட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வேண்டும்.தமிழகத்தில் தரிசனம் ஆன்மிக தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு இடைநிறுத்திற்கு பின்பு புதிய தமிழ் ஆன்மிக தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது வரவேற்க்க தக்கது.இன்டல்சாட்17 செயற்கைகோளில் இலவச தொலைக்காட்சியாக சிவம் டிவி ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.
அலைவரிசை விபரங்கள்
Satellite                   INTELSAT17@66.0E(C-BAND)
Freq Rate               3877
Symbol Rate           14300
Polar                       Horizontal
Modulation              Mpeg4/Dvb S2
Mode                      Fta

13/08/2015

ஷாப்பிங் ஜீன் தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் புதிய அலைவரிசைக்கு மாற்றம்

நண்பர்களே தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இணைந்து கடந்த சில வருடங்களுக்கு ஷாப்பிங் ஜீன் நிறுவனத்தினரால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடங்கப்பட்ட ஷாப்பிங் ஜீன் டிவியின் செயற்கைகோள் ஒளிபரப்பு அலைவரிசையில் தற்சமயம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் தொடக்க ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் முதன்முதலாக ஐதராபாத் ஒளிபரப்பு முனையத்தின் அலைவரிசையில் (3895) தொடங்கப்பட்டது.தற்சமயம் அதே செயற்கைக்கோள் ஒளிபரப்பு நிறுவனத்தின் மற்றொரு அலைவரிசையில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.புதிய அலைவரிசையின் சிக்னலை பெற 8 முதல் 10.12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்டுத்த வேண்டும்.இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பை இன்டல்சாட்17யில் தொடங்கியிருப்பது குறிப்பிடதக்கது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                     Intelsat17@66.0E
Freq Rate                   3877
Symbol Rate              14300
Polar                           Horizontal
Modulation                 Mpeg4/Dvb s2
Mode                          Fta

02/08/2015

தென்னிந்திய தமிழ் மலையாளம் தெலுங்கு தொலைக்காட்சிகள் யூடெல்சாட்70பியில் உதயம்

நண்பர்களே தென்னிந்தியாவின் தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு புதிதாக யூடெல்சாட்70பி செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.இப்புதிய செயற்கைகோளில் இந்தியா தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் தொலைக்காட்சிகளில் முன்டிவி.பெப்பர் டிவி.தந்தி டிவி.சத்தியம் டிவி மற்றும் நீயூஸ் 7 தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள 
இத்தொலைக்காட்சிகளின் அலைவரிசை சோதனை ஒளிபரப்பு என்பதால் ஒளிபரப்பில் மாற்றங்கள் ஏற்படலாம்.கேரளா மாநிலம் கொச்சியில் செயல்படும் ஈசால் சியாம் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.அலைவரிசை சிக்னலை பெற 60 செமீ முதல் 90 செமீ கேயூ டிஷ்ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சிகளை காணலாம்.MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வேண்டும்.இச்செயற்கைகோளில் இலங்கை நாட்டின் டான் தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடதக்கது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                  Eutelsat70B@70.5E(Ku-band)
Freq Rate               11355
Synbol Rate            44900
Polar                      Vertical
Modulation             Mpeg4/Dvb s2
Mode                     Fta