சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

28/01/2015

ஏபிஎஸ்2 மற்றும் யூடெல்சாட்70பி.இன்சாட்3சி கேயூ பேன்ட் செயற்கைகோள் தொலைக்காட்சிகள் 60செமீ டிஷ்யில்

நண்பா்களே தற்சமய காலங்களில் மிக முக்கியமான ஆங்கில மற்றும் கல்வி தொடா்பான இலவச தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் செயற்கைகோள்களான இன்சாட்3சி.ஏபிஎஸ்2 மற்றும் யூடெல்சாட்70பி ஆகிய செயற்கைகோள்களை மிக சிறிய 60செமீ அளவிளான கேயூ பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி இலவச தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளை காணலாம்.இவற்றின் முலம் ஏபிஎஸ்2@75.0 மற்றும் இன்சாட்3சி@74.0 செயற்கைகோள்களின் தொலைக்காட்சிகளான
1.டிபிஎன் டிவி ஆசியா
2.தி சர்ச் டிவி
3.கனல் 10 ஆசியா
4. சுமையல் அப் சைல்ட்
5.ஆர்டிம் டிவி
6.வித்திய வாணி
7.விசிட்டர்ஸ்
8.பிசாக் டிவி1.2
9.உட்கரஸ் டிவி 1.2.3.4
10.கலைஞா் டிவி
11.வேந்தா் டிவி மற்றும் சில தொலைக்காட்சிகள்
யூடெல்சாட்70பி@70.5E
1.மீயூசிக் பாங்களா டிவி
2.தினாத்த டிவி லங்கா
3.ஸ்ரீ டிவி லங்கா
4.ஸ்ரீ டிவி முவிஸ்
5.டான் டிவி
6.எம் டி எ இன்டர்நேஷனல் டிவி(இஸ்லாம்) மற்றும் சில தொலைக்காட்சிகள்
தொழில்நுட்ப முறைகள்:
முதலில் ஏபிஎஸ் மற்றும் இன்சாட3சி செயற்கைகோள்களுக்கான அதிக சிக்னல் அலைவரிசைகளை பயன்படுத்தி டிஷ் ஆன்டெனாவை செட்டிங் செய்து கொள்ள வேண்டும்.பின்பு மற்றொரு கேயூ எல்என்பியை பயன்படுத்தி செட்டிங் செய்த ஏபிஎஸ் செயற்கைக்கோள்களுக்கு மேற்பகுதியில் எல்என்பியின் வயர் கிழ் நோக்கி வருமாறு மிக அருகில் வைத்து அலைவரிசை சிக்னல் கிடைக்கப்படும் பொழுது தகுந்த இணைப்பு சாதனத்தை பயன்படுத்தி எல்என்பியை பொருத்திவிட வேண்டும்.இவற்றின் தொழில்நுட்ப வடிவமைப்பை 60 முதல் 90.120 செமீ டிஷ் ஆன்டெனாகளிலும் பயன்படுத்தலாம்.உங்கள் முயற்ச்சியின் பார்வைக்கு எங்கள் இணையதளத்தினால் முயற்ச்சி செய்து எடுக்கப்பட்ட சில உதவி படங்கள்

25/01/2015

கைரலி அரேபியா(KAIRALI ARABIA TV) புதிய மலையாளம் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17@66.0Eயில் தொடக்கம்

நண்பா்களே கேரளா மாநிலத்தின் மலையாளம் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மிக பிரபலமான பொழுது போக்கு தொலைக்காட்சிகளான கைரலி டிவியின் நிகழ்ச்சிகள் வளைகுடா நாடுகளில் வாழும் மலையாளம் மக்கள் காணும் வகையில் அந்நிறுவனத்தில் இருந்து புதிதாக கைரலி அரேபியா என்ற பெயரில் புதிய தொலைக்காட்சியை தொடங்கியுள்ளனா்.இப்புதிய தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு சென்னை டெலிஸ்பாட் நிறுவனத்தின் ஒளிபரப்பு முனையத்தின் 
முலம் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த வருடத்தில் இத்தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அனுமதி அரசிடம் கிடைக்கபெற்ற பிறகு ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இதே செயற்கைகோள் அலைவரிசையில் அந்நிறுவனத்தின் ஏனைய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகுவது குறிப்பிடதக்கது.கேரளா மாநிலத்தை பொறுத்தமட்டிலும் வளைகுடா நாடுகளில் வாழும் மக்கள் நிகழ்ச்சிகளை கானும் வகையில் மற்ற நிறுவனங்களும் இது போன்று தொலைக்காட்சிகளை தொடங்கியிருப்பது குறிப்பிடதக்கது.அனைத்து தொலைக்காட்சிகளும் இலவச ஒளிபரப்பாக வலம் வருகிறது.வேளைகுடா மக்கள் தொலைக்காட்சியினை பெற குறைந்தபட்சம் 6 முதல் 8 அடி சிபேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காணலாம்.
அலைலைரிசை விபரங்கள்:
Satellite                 Intelsat17@66.0 East
Freq Rate             4015
Symbol Rate         30000
Polar                     Vertical
Modulation            Mpeg4/Dvb s2
Mode                    Fta

22/01/2015

கலைஞா் டிவி.வேந்தா் டிவி.ஆசீர்வாதம் தொலைக்காட்சிகள் ABS 2@75.0E செயற்கைகோளில் தொடக்கம்

நண்பா்களே தமிழகத்தின் மிக பிரபலமான தமிழ் பொழுது போக்கு தொலைக்காட்சிகளான கலைஞா்டிவி நிறுவனத்தின் செய்திகள்.முரசு.சிரிப்பொலி.கலைஞா் டிவி போன்ற தொலைக்காட்சிகளும் எஸ்ஆா்எம் நிறுவனத்தின் முதல் தொலைக்காட்சியான வேந்தா் டிவி மற்றும் கிருத்துவ தொலைக்காட்சியான ஆசீர்வாதம் போன்ற தமிழ் 
தொலைக்காட்சிகள் புதிய அலைவரிசையில் ஒளிபரப்பாகிறது.இப்புதிய ஒளிபரப்பில் இலவச தொலைக்காட்சிகளாக தெரிவது குறிப்பிடதக்கது.60செமீ அளவுள்ள சிறிய கேயூ டிஷ் ஆன்டெனா முலம் தெற்கு திசையில் வரும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.மேலும் இவ் அலைவரிசைகளில்களில் ஒரு எச் டி விளையாட்டு தொலைக்காட்சியும் இந்திய அரசு 
தொலைக்காட்சிகள் உட்பட 21 தொலைக்காட்சிகள் வருகிறது.தொலைக்காட்சிகளின் இலவச ஒளிபரப்பு தற்காலிகத்தின் அடிப்படையில் மட்டும் செயல்பட வாய்ப்புள்ளது.தொலைக்காட்சிகளை காண   MPEG4/DVB S2 செட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வேண்டும்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                ABS2@75.0E(KU-BAND)
Freq Rate            11735.11795
Symbol Rate        45000
Polar                    Horizontal
Modulation           Mpeg4/dvb s2
Mode                   FTA

17/01/2015

ஸ்ரீ லங்கா டான் தமிழ் ஒளி மற்றும் டான் மீயூசிக் தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு யூடெல்சாட்70பி@70.5E தொடக்கம்

நண்பா்களே ஸ்ரீ லங்கா நாட்டின் ASK குழுமத்தின் பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான டான் டிவி தமிழ் ஒளி மற்றும் 24 மணி நேர மீயூசிக் தொலைக்காட்சியான டான் மீயூசிக் தொலைக்காட்சிகள் இலங்கை மற்றும் ஆசிய நாடுகளுக்கான ஒளிபரப்பை
ஜெர்மனி நாட்டின் ஹா்சன் ஒளிபரப்பு முனையத்தின் முலம் யூடெல்சாட்70B@70.5E செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இத் தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு ஐரோப்பா நாடுகளுக்கு யூடெல்சாட்9எ செயற்கைகோள் முலம் மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது குறிப்பிடதக்கது.இலங்கை நாட்டில் UHFஆன்டெனா முலமாக சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது
குறிப்பிடதக்க செய்தியாகும்.யாழ் மாவட்டத்தில் கேபிள் ஒளிபரப்பில் மட்டும் ஒளிபரப்பை வழங்கி வந்த டான் மீயூசிக் தொலைக்காட்சி முதன் முறையாக செயற்கைகோள் ஒளிபரப்பை தொடங்கியிருப்பது யூடெல் சாட்70பி செயற்கைகோளில் மட்டுமே.தொலைக்காட்சிகளை காண அதி நவின செட் டாப் பாக்ஸ் MPEG4/DVB S2 பயன்படுத்த வேண்டும்.தெற்காசிய நாடுகளை
பொறுத்தமட்டிலும்செயற்கைகோள் சிக்னலை பெறமிக சிறிய அளவுள்ள 60செமீ முதல் 90செமீ வரையிலான கேயூ டிஷ் ஆன்டெனா முலம் பயன்படுத்தலாம்.இலவச ஒளிபரப்பாக டான் தொலைக்காட்சிகள் தொடக்கபட்டுள்ளது யூடெல்சாட்70பி செயற்கைகோளில் என்பது குறிப்பிடத்தக்கது.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate              11292
Symbol Rate          44997
Polar                      Horizontal
Modulation             Mpeg4/dvb s2
Mode                     Fta

14/01/2015

சதீஸ் சாட்தமிழ் இணையதளத்தின் இனிய தைப்பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்

அன்பான சதீஸ் சாட் தமிழ் இணையதளத்தின் தோழர்களே இனிய தமிழ் வணக்கங்கள்.வரவிருக்கும் தைப்பொங்கல் நிறைவடைந்து நமது வலைதளம் ஒரு லட்சம் பார்வையளார்களை வருகைபுரிந்த சாதனையை படைக்கவிருக்கிறது.எனவே நமது சதீஸ் சாட் தமிழ் தளத்திற்கு தினந்தோறும் வருகைபுரிந்து இச்சாதனை படைக்க உறுதுணையாக இருந்த அனைத்து தமிழ் தோழர்களுக்கும் சதிஸ் சாட் தளத்தின் பணிவான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகம்.இலங்கை.மலேசியா மற்றும் பல நாடுகளில் வாழும் நம் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

10/01/2015

டிடி பீரி டிஷ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு அலைவரிசைகளில் மாற்றம்

நண்பர்களே இந்தியாவின் இலவச தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் டிடி பீரி டிஷ் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளின் அலைவரிசைகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இப்புதிய அலைவரிசை மாற்றம் இன்சாட்4பி செயற்கைகோளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த 2003 ஆண்டில் தொடங்கப்பட்ட இச்சேவையில் புதிய தொலைக்காட்சிகளை சேர்க்கும் வகையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.தற்சமய நிலவரப்படி அரசு மற்றும் தனியார் என 60 தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு
செய்யப்படுகிறது.கடந்த வருடத்தின் இறுதியில் புதிய அலைவரிசை தொடங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்ககது.இனி வரக்கூடிய காலங்களில் டிடி பீரி டிஷ் தொலைக்காட்சிகளின் சேவை தொடர்ச்சியாக பெற புதிய தொழில்நுட்பம் MPEG4/DVB S2 பொருந்திய செட் டாப் பாக்ஸ் பயன்படுத்தவேண்டும்.மற்றபடி டிஷ் செட்டாப்யில் எவ்வித மாற்றம் கிடையாது.டிடி பிரி டிஷ் சேவையில் மேலும் பல தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.அரசு தமிழ் தொலைக்காட்சி பொதிகை மற்றும் டிடி நேஷனல் தொலைக்காட்சிகளை புதிய அலைவரிசைகளில் காணலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate             11150,10990,11570,11070
Symbol Rate         28500
Poalr                    Vertical
Modulation           Mpeg2/dvb s
Mode                   Fta

08/01/2015

ஜொ மியூசிக் ஹிந்தி தொலைக்காட்சி புதிய அலைவரிசையில் தாய்காம்5@78.5E செயற்கைகோளில் ஒளிபரப்பு

நண்பர்களே இந்தியாவின் பாலிவுட் மியூசிக் தொலைக்காட்சியான ஜொ மியூசிக் தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு தாய்காம்5 @78.5Eசெயற்கைகோளில் புதிய அலைவரிசையில் தொடங்கப்பட்டுள்ளது.இத்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு பல வருடங்களாகும்.தொலைக்காட்சியின் முதல் செயற்கைப்பகோள் ஒளிபரப்பு
நிறுவனத்தின் தனி அலைவரிசை முலம் தொடங்கப்பட்டது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் என்று பார்த்தால் ஹிந்தி பழைய மற்றும் புதிய திரைப்பட பாடல்கள் மற்றும் திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.மேலும் இந்தியாவின் சில மாநிலங்களின் லாட்டரி முடிவுகள் போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.அலைவரிசை சிக்னலை 6 அடி முதல் 12 அளவுள்ள சி பேன்ட் டிஸ் ஆன்டெனா முலம் எளிதாக பெறலாம்.
அலைவரிசை விபரங்கள்
Freq Rate           4160
Symbol rate        30000
Polar                  Vertical
Modulation         Mpeg2/dvb s
Mode                 Fta

04/01/2015

ஸ்ரீ லங்கா டிடிஎச் சேவையில் தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு இன்டல்சாட்12@45.0E

நண்பா்களே ஸ்ரீ லங்கா டிடிஎச் சேவையான டயலாக் டிடிஎச் சேவையில் தமிழ் தொலைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இந்திய தமிழ் தொலைக்காட்சிகளான
சன் டிவி.சன் மியூசிக்.கலைஞா் டிவி.விஜய் டிவி.கேடிவி போன்ற தொலைக்காட்சிகளும்.இலங்கை நாட்டின் அரசு தமிழ் தொலைக்காட்சிகளான நேத்ராடிவி.வசந்தம் டிவி.மற்றும் சக்தி டிவி.சினி திரை போன்ற தொலைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இலங்கை நாட்டின் முதல் தனியார் டிடிஎச் சேவையில் தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு கடந்த சில வருட 
காலங்களாக செயலாற்றி வருகிறது.நாட்டில் மேலும் பல தமிழ் தொலைக்காட்சிகள் டிடிஎச் சேவை அல்லாது ஆன்டெனா முலம் காண கூடியதாக உள்ளது.கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகி வருகிறது.இத் தொலைக்காட்சிகள் செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல் சாட்12யில் செயல்படுகிறது.