சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

22/09/2015

பெப்பர் டிவி செயற்கைகோள் ஒளிபரப்பு புதிதாக இன்டல்சாட்17 செயற்கைகோளுக்கு மாற்றம்

நண்பர்களே தமிழகத்தின் முன்னனி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான பெப்பர் டிவி செயற்கைகோள் ஒளிபரப்பு தமிழ் தொலைக்காட்சிகள் சங்கமிக்கும் செயற்கைகோளான இன்டல்சாட்17க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பெப்பர் டிவியின் முதல் தொடக்க செயற்கைகோள் ஒளிபரப்பு இந்தியாவின் பார்த்தி டெலிஸ்பாட் நிறுவனத்தின் 
ஒளிபரப்பு முனையத்தின் முலமாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டு தற்சமய காலம் வரை ஒளிபரப்பாகி வந்தது.பெப்பர் டிவியின் நிகழ்ச்சிகள் என்று பார்த்தால் திரைப்படம் மற்றும் கேம் ஷோ போன்ற நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.பார்த்தி டெலிஸ்பாட் நிறுவனம் இன்டல்சாட்17 செயற்கைகோளிலும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதற்கான அலைவரிசையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள புதிய அலைவரிசை 
சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் அதற்கு மேற்பட்ட சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட்டாப் பாக்ஸில் மட்டுமே கிடைக்கிறது.மேலும் இப்புதிய அலைவரிசையில் தமிழ் மற்றும் பல மொழி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பை தொடங்கலாம்.பெப்பர் டிவி ஒளிபரப்பு இலவச இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.
அலைவரிசை விபரங்கள்
Satellite                  Intelsat17@66.0E(C-Band)
Freq Rate               3933
Symbol Rate          18333
Polar                       Horizontal
Modulation             Mpeg4/Dvb s2
Mode                      Fta

10/09/2015

இந்தியாவின் முதல் ஷாப்பிங் ஹெச்டி தொலைக்காட்சி நாப்டல் ஹெச்டி இன்சாட்4எ யில் ஒளிபரப்பை தொடக்கம்

நண்பர்களே இந்தியாவில் அதிநவின ஹெச்டி தொழில்நுட்ப தொலைக்காட்சிகளை பொழுதுபோக்கு விளையாட்டு செய்திகள் என பல்வேறு பிரிவுகளில் தொடங்கப்பட்டு வருகிறது.அந்த வரிசையில் இந்தியாவின் முன்னனி வீட்டு உபயோக பொருட்களை விற்ககூடிய நிறுவனமான நாப்டல் கடந்த வருடம் முதல் தொழில் ரீதியான தொலைக்காட்சிகளை தொடங்கி வருகிறது.தமிழ் மலையாளம் ஹிந்தி தெலுங்கு கன்னடா போன்ற மொழிகளில் தொலைக்காட்சிகளை 
நிறுவியுள்ளனர்.தற்சமயம் அந்நிறுவனம் அநவின தொழில்நுட்ப ஹெச்டி தொலைக்காட்சியை நாப்டல் ஹெச்டி என்ற பெயரில் தொடங்கியுள்ளனர்.இப்புதிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இந்தியாவின் இன்சாட்4எ செயற்கைகோளின் முலம் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் ஷாப்பிங் ஹெச்டி தொலைக்காட்சி இதுவாகும்.தொலைக்காட்சியில் 24 நேரமும் வீட்டு 
உபயோக பொருட்கள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் அவற்றின் விலை போன்ற விபரங்கள் தொடர்பான நிகழ்ச்சிகை வழங்குகிறது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு ஹிந்தி மொழியில் தொடங்கப்பட்டுள்ளது.நாப்டல் தொலைக்காட்சியின் அலைவரிசையின் சிக்னலை பெற 8 முதல் அதற்குமேற்பட்ட சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயனபடுத்தலாம்.இலவச தொலைக்காட்சியாக இன்சாட்4எ செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்
Satelllite              Insat4a@83.0E(C-Band)
Freq Rate           3805
Symbol Rate       28500
Polar                  Horizontal
Modulation         HD.Mpeg4/Dvb s
Mode                 Fta

05/09/2015

தீபம் டிவி(DEEPAM TV UK) ஐரோப்பா தமிழ் தொலைக்காட்சி ஆசியா நாடுகளுக்கான ஒளிபரப்பு யூடெல்சாட்70 யில் உதயம்

நண்பர்களே ஐரோப்பா நாடுகளில் வாழம் தமிழ் மக்களின் பொழுதுபோக்கு மற்றும் பிரபல தமிழ் தொலைக்காட்சியான தீபம் டிவியின் ஒளிபரப்பு முதன்முறையாக தெற்காசிய நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் காணகூடிய வகையில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.தீபம் டிவி உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு யூடெல்சாட்9எ யுடாக ஐரோப்பா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் மட்டும் நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது.இலங்கை நாட்டின் பிரதான நிகழ்வுகளை ஐரோப்பா நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கும் தமிழ்
தொலைக்காட்சியாக செயல்படுகிறது.தற்சமயம் தீபம் டிவி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு இலங்கை மற்றும் இந்தியா மலேசியா போன்ற நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் காணகூடிய வகையில் யூடெல்சாட்70பி செயற்கைகோளின் முலம் ஒளிபரப்பு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.தீபம் டிவியின் நிகழச்சிகளை ஆசியா வளைகுடா மற்றும் கிழக்காசிய நாடுகளில் காண 60 முதல் 120 செமீ வரையிலான கேயூ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.மேலும் MPEG4/DVB S2 செட்டாப் பாக்ஸ் பயன்படுத்த வேண்டும்.தொலைக்காட்சியின்
செயற்கைகோள் ஒளிபரப்பு ஈசல் சியாம் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்கப்பட்டுள்ளது.திபம் டிவி இலவச ஒளிபரப்பாக தொடங்கப்பட்டுள்ளது.இதே அலைவரிசையில் தமிழகத்தின் சில தொலைக்காட்சிகளும் மற்றும் யாழ்பானத்தின் டான் டிவி போன்ற தொலைக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
அலைவரிசை விபரங்கள்
Satellite                    Eutelsat70B@70.5E(Ku-band)
Freq Rate                 11355
Symbol Rate             44900
Polar                        Vertical
Modulation                Mpeg4/Dvb s2
Mode                        Fta