சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

27/12/2015

எம்எஸ்எம் நிறுவனம் தொடங்கிய புதிய ஹெச்டி தொலைக்காட்சி சோனி மேக்ஸ் ஹெச்டி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிறுவனமான எம்எஸ்எம் தங்களது நிறுவனத்தின் முலம் ஹிந்தி திரைப்படங்களை ஒளிபரப்பும் புதிய தொலைக்காட்சி சோனி மேக்ஸ் ஹெச்டி 
ஒளிபரப்பை இந்தியாவில் தொடங்கியுள்ளது.இந்தியாவின் முன்னனி நிறுவன தொலைக்காட்சிகள் அனைத்தும் உயர்தர தொழில்நுட்ப ஹெச்டி தரத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.அவ்வரிசையில் எம்எஸ்எம் நிறுவனம் சோனி டிவி ஹெச்டி.சோனி சிக்ஸ் ஹெச்டி.சோனி பிக்ஸ் ஹெச்டி மற்றும் ஆக்ஸன் ஹெச்டி போன்ற தொலைக்காட்சிகளை ஹெச்டி வடிவில் ஒளிபரப்பி வருகிறது.சோனி மேக்ஸ் ஹெச்டி தொலைக்காட்சியின் 
செயற்கைகோள் ஒளிபரப்பு அந்நிறுனத்தின் ஹெச்டி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் செயற்கைகோளான இன்டல்சாட்17யில் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இந்தியாவின் கேபிள் மற்றும் டிடிஎச் நிறுவனங்களிலும் தொடங்கப்படலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite              Intelsat17@66.0E(C-Band)
Freq Rate           3845
Symbol Rate      30000
Polar                   Horizontal
Modulation         HD.MPEG4.DVB S2
Mode                  Pay 

19/12/2015

சிசி டிவி நியூஸ் மற்றும் டிபிஎன் ஆங்கில கிருத்துவ தொலைக்காட்சிகள் புதிய ஒளிபரப்பு அப்ஸ்டார்7@76.0E தொடக்கம்

நண்பர்களே சைனா நாட்டின் அரசு தொலைக்காட்சிகளான சிசிடிவி செய்திகள் மற்றும் சில சைனா மொழி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு புதிதாக கிழக்காசிய மற்றும் ஆசியா நாடுகளுக்கு என்று அப்ஸ்டாா்7 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.மொத்தம் 4 சைனா தொலைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளது.மேலும் டிபின் ஆசியா தொலைக்காட்சி குழுமத்தின் சில தொலைக்காட்சிகளும் அப்ஸ்டார்7 
செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.டிபின் நிறுவனத்தின் ஆங்கில கிருத்துவ தொலைக்காட்சிகள் ஏபிஎஸ்2 செயற்கைகோளில் கேயூ அலைவரிசையில் கடந்த பல ஆண்டுகளாக ஆசியா மற்றும் வளைகுடா.ரஷ்யா நாடுகளுக்கு ஒளிபரப்பை வழங்கி வந்தது.இத்தொலைக்காட்சிகள் அலைவரிசை சிக்னல்கள் அனைத்தும் மிக குறைந்த அளவு 6 அடி முதல் 12 அடி சிபேன்ட் டிஷ்களில் கிடைக்கிறது.மிக எளிய தொழில்நுட்பமான MPEG4/DVB S1 செட் டாப் பாக்ஸ்யில் தொலைக்காட்சிகளை காணலாம்.
அலைவரிசை விபரங்கள்: CCTV NETWORK
Satellite                 Apstar 7@76.0E(C-Band)
Freq Rate              3972
Symbol Rate         15050
Polar                      Vertical
Modulation            Mpeg4/Dvb s1
Mode                     Fta
TBN NETWORK
Satellite                 Apstar 7@76.0E(C-Band)
Freq Rate              3872
Symbol Rate         10000
Polar                      Vertical
Modulation            Mpeg4/Dvb s1
Mode                     Fta

12/12/2015

பிரசார் பாரதி டிடி பொதிகை தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு புதிய செயற்கைகோள் இன்சாட்4பி@93.5Eக்கு மாற்றம்.

நண்பர்களே இந்தியா அரசு பொது ஒளிபரப்பு தொலைக்காட்சி நிறுவனமான பிரசார் பாரதியின் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு புதிய செயற்கைகோளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தென்னிந்திய தொலைக்காட்சிகளான டிடி பொதிகை.டிடி மலையாளம்.டிடி யாதகிரி.டிடி சப்த கிரி.டிடி கன்னடா மற்றும் டிடி லக்னோ டிடி பீகார் போன்ற தொலைக்காட்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் கடந்த பல வருடங்களாக இன்சாட்3எ செயற்கைகோளின் முலம் ஒளிபரப்பை ஆசியா நாடுகளுக்கு ஒளிபரப்பாகி வந்தது.இனி வரும் காலங்களில் அனைத்து டிடி 
தொலைக்காட்சிகளும் இன்சாட்4பி செயற்கைகோளின் முலம் ஒளிபரப்பை வழங்கும்.பொதிகை தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் முன்பு ஒளிபரப்பாகி வந்த MPEG2/DVB S1 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யில் காணலாம்.இம்மாற்றம் கேபிள் மற்றும் டிடி எச் ஆப்ரேட்டர்களுக்கு மட்டுமே.இந்தியாவை தவிர மாற்ற நாடுகளில் பொதிகை டிவியினை காண 10 மேற்பட்ட டிஷ் ஆன்டானவை பயன்படுத்த வேண்டும்.ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் பொதிகை டிவியின் ஒளிபரப்பு ஆம்ஸ்5@17.0E செயற்கைகோளில் இருந்து ஆப்ரிக்காசாட்1எ@46.0Eக்கு கடந்த மாதத்தில் ஒளிபரப்பு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.
அலைவரிசை விபரங்கள்
Satellite                 Insat4B@93.5E(C-Band)
Freq Rate              4050
Symbol Rate         8600
Polar                     Horizontal
Modulation           Mpeg2/Dvb s
Mode                    FTA

03/12/2015

ஜெயா டிவி குழுமத்தின் தமிழ் தொலைக்காட்சிகள் இலவச ஒளிபரப்பு இன்டல்சாட்20யில்

நண்பர்களே தமிழகத்தின் முன்னனி தமிழ் தொலைக்காட்சியான ஜெயா டிவி குழுமத்தின் தொலைக்காட்சிகளான ஜெயா டிவி.ஜெயா ப்ளஸ்.ஜெயா மூவிஸ் மற்றும் ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சிகள் தற்காலிக இலவச ஒளிபரப்பின் 
அடிப்படையில் அந்நிறுவனத்தின் உலகளாவிய செயற்கைக்கோள் இன்டல்சாட்20 அலைவரிசையில் ஒளிபரப்பாகிறது.இத்தொலைக்காட்சிகள் அனைத்து கட்டண தொலைக்காட்சிளாக தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சிகளின் இலவச ஒளிபரப்பு 
மாற்றத்திற்குட்பட்டது.தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு மிக தெளிவான வீடியோ மற்றும் ஆடியோவில் அமைந்துள்ளது.தொலைக்காட்சிகள் அனைத்தும் மாவீஸ் மீடியா நிறுவனத்தின் ஒளிபரப்பு முனையத்தின் முலம் இந்தியாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.விரைவில் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்படும்.
அலைவரிசை விபரங்கள்;
Satellite                    Intelsat20@68.5E(C-BAND)
Freq Rate                 4130
Symbol Rate            10370
Polar                        Vertical
Modulation               Mpeg4/Dvb s1
Mode                       PAY/FTA  

சன்டிவி ரிசெட் இன்டியா(SUN TV RESET INDIA) தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் தொடக்கம்

நண்பர்களே தமிழகத்தின் முன்னனி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான சன்டிவி குழுமத்தின் சார்பாக புதிய தொலைக்காட்சி சன்டிவி ரிசெட் இன்டியா என்ற பெயரில் ஆசியா நாடுகளுக்கான ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது. சன்டிவி ரிசெட் இன்டியா  என்ற பெயரில் இத்தொலைக்காட்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு சன் குழும தொலைக்காட்சி ஒளிபரப்பு அலைவரிசையில தொடங்கப்பட்டு 
இருந்தது.இத்தொலைக்காட்சியில் இந்தியாவிற்கு ஒளிபரப்பாகும் சன் டிவியின் நிகழ்ச்சிகள் மாற்றப்பட்ட நேரங்களில் ஒளிபரப்பாகிறது.தற்சமயம் இலவச தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது இருப்பினும் எவ்வித நேரங்களிலும் கட்டண தொலைக்காட்சியாக சன்டிவி ரிசெட் இன்டியா மாற்றப்படலாம்.ஆசியாவின் அனைத்து நாடுகளிலும் தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட்டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                 Intelsat17@66.0E(C-BAND)
Freq Rate              3925
Symbol Rate         30000
Polar                     vertical
Modulation            Mpeg4/Dvb s2
Mode                    Pay/Fta

01/12/2015

பூம்ரிங் மற்றும் டூனாமி கார்டூன் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தாய்காம்6@78.5யில் தொடக்கம்

நண்பர்களே தாய்லாந்து நாட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பு செயற்கைகோளான தாய்காம்6யில் தாய்லாந்து நாட்டின் பிஎஸ்ஐ நிறுவன தொலைக்காட்சி ஒளிபரப்பு அலைவரிசையில் உலகின் முன்னனி புதிய கார்டூன் தொலைக்காட்சிகளான பூம்ரிங் மற்றும் டூனாமி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சிகள் இரண்டும் கட்டண 
தொலைக்காட்சிகளாக தாய்காம்6யில் ஒளிபரப்பாகிறது.உலகின் மிக பிரபலமான கார்டூன் நிகழ்ச்சிகளை வழங்குகிறது இவ்விரு தொலைக்காட்சிகளும்.இத்தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை தென்இந்தியாவில் பெற குறைந்தபட்சம் 4 முதல் 6 அடி வரையிலான கேயூ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.தாய்லாந்து மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் அலைவரிசை சிக்னலை பெற 60 செமீ முதல் 120 வரையிலான டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                Thaicom6@78.5E(KU-Band)
Freq Rate              12730
Symbol Rate         30000
Polar                     Vertical
Modulation           Mpeg2/Dvb s1
Mode                    Pay/Biss