சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

27/02/2016

ஹெச்பிஎன் தமிழ் டெலிஷாப்பிங் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17க்கு மாற்றம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி டெலி ஷாப்பிங் தொலைக்காட்சியான ஹெச்பிஎன் டிவி புதிதாக தனது ஒளிபரப்பை தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கியுள்ளது.ஹெச்பிஎன் டிவி கடந்த வருடத்தில் இன்டல்சாட்20 செயற்கைகோளில் இருந்து இன்சாட்4எ க்கு ஒளிபரப்பு மாற்றம் செய்யப்பட்டதை நமது இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.தற்சமயம் இன்டல்சாட்17யில் பார்த்தி டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் அலைவரிசையில் இருந்து தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் மலையாளம்.ஹிந்தி போன்ற மொழிகளில் ஹெச்பிஎன் டிவியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.இலவச ஒளிபரப்பாக தற்சமயம் ஹெச்பிஎன் டிவி இன்டல்சாட்17யில் ஒளிபரப்பாகி வருகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                Intelsat17@66.0E(C-Band)
Freq Rate              3933
Symbol Rate         18333
Polar                     Horizontal
Modulation            Mpeg4/Dvb s2
Service Type         Fta

25/02/2016

வேந்தர் டிவி மற்றும் சில இந்திய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு ஏபிஎஸ்2யில் தொடக்கம்.

நண்பர்களே ஏபிஎஸ் செயற்கைகோள் நிறுவனம் கடந்த வருடத்தில் இந்திய தொலைக்காட்சிகள் அடங்கிய புதிய அலைவரிசையை ஏபிஎஸ்2 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடங்கியது.இவற்றில் மொத்தம் 70க்கு மேற்பட்ட தொலைக்காட்சிகள் ஒளிபரப்பை தொடங்கியது.இவற்றில் இலவசமாக ஹிந்தி மலையாளம் தெலுங்கு மற்றும் தமிழ் கன்னடா சில முக்கிய தொலைக்காட்சிகள் இப்புதிய அலைவரிசைகளில் 
சேர்க்கப்பட்டுள்ளது.இப்புதிய அலைவரிசையில் தமிழ் தொலைக்காட்சியான வேந்தர் டிவி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சிகளின் அலைவரிசையை mpeg2/dvb s1தொழில்நுட்ப செட்டாப் பாக்ஸ்யில் காணலாம்.அனைத்து தொலைக்காட்சிகளும் இலவசமாக
ஒளிபரப்பாகிறது.இத்தொகுப்பில் சத்தியம் தொலைக்காட்சிக்கு அடுத்தது இரண்டாவது தொலைக்காட்சியாக வேந்தர் டிவி புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

அலைவரிசை விபரங்கள்
Satellite               ABS2@75.0(KU-Band)
Freq Rate           12227
Symbol Rate       44000
Polar                  Horizontal
Modulation        Mpeg2/Dvb s1
Mode                Fta

நீயூஸ் 7 தமிழ் செய்திகள் தொலைக்காட்சி இன்டல்சாட்17யில் புதிய அலைவரிசையில் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பர்களே தமிழகத்தின் முன்னனி செய்திகள் தொலைக்காட்சியான நீயூஸ் 7 தற்சமயம் ஒளிபரப்பாகி வரும் இன்டல்சாட்17 செயற்கைகோளின் அலைவரிசையில் இருந்து புதிய அலைவரிசையில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.கடந்த வருடத்தில் ஹைத்திரபாத் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்திற்கு இருந்து சென்னை டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்திற்கு
நீயூஸ்7 தொலைக்காட்சி மாற்றம் செய்யப்பட்டது.தற்சமயம் சென்னை டெலிஸ்பாட் நிறுவனத்தின் மற்றொரு விரிட்டிக்கல் அலைவரிசையில் நீயூஸ்7 தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இப்புதிய ஒளிபரப்பு மிக எளிய தொழில்நுட்பமான MPEG4/DVB S1 வடிவத்தில் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னல் மிக எளிதாக 6 அடி முதல் 16 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் கிடைக்கும்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite              Intelsat17@66.0E(C-Band)
Freq Rate          3845
Symbol Rate      27692
Polar                 Vertical
Modulation        Mpeg4/Dvb s1
Mode                FTA

17/02/2016

பென்சி டிவி(BENZE TV TAMIL) புதிய தமிழ் லைப் ஸ்டையில் எண்டர்டெய்மென்ட் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்

நண்பர்களே தமிழகத்தில் புதிய லைப் ஸ்டையில் தொலைக்காட்சி ஒன்று புதிதாக உதயமாகவுள்ளது.தமிழகத்தின் பென்சி குருப் ஆப் கம்பேனி நிறுவனத்தின் சார்பாக பென்சி டிவி என்ற பெயரில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தமிழக்கத்தில் தொடக்கப்படவுள்ளனர்.இப்புதிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இணையத்தின் வழியாக ஒளிபரப்பாகி வருகிறது.பென்சி டிவியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் 
சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.விரைவில் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கலாம்.ஹைத்தரபாத் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலமாக செயற்கைகோள் ஒளிபரப்பு தொடங்கியுள்ளனர்.இலவச தொலைக்காட்சியாக பென்சி டிவி தனது ஒளிபரப்பை இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கியுள்ளது.தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற குறைந்த பட்சம் 8 முதல் 16 அடி வரையிலாக சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.இத்தொலைக்காட்சியின் அலுவலகம் சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ளது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை அதிநவின MPEG4/DVB S2தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                 Intelsat17@66.0E(C-Band)
Freq Rate              3877
Symbol Rate         14300
Polar                     Horizontal
Modulation            Mpeg4/Dvb s2
Mode                    FTA 

01/02/2016

டிஷ்டிவி டிடிஎச்யில் புதிய அலைவரிசையில் ஜி தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடக்கம்

நண்பர்களே டிஷ்டிவி நிறுவனத்தில் புதிதாக மூன்று அலைவரிசைகள் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக டிஷ்டிவியின் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு சேவையில் மாற்றம் செய்து வருநிலையில் இப்புதிய அலைவரிசைகள் தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் முன்னனி தொலைக்காட்சியான ஜி தமிழ் இப்புதிய அலைவரிசையில் ஒளிபரப்பு 
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் ஜி கலிங்கா ஜி மத்திய பிரதேஷ் மற்றும் சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.ஜி தமிழ் தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பாக சிசிஸ்8 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.

அலைசவரிசை விபரங்கள்
Satellite               SES8@95.0E(KU-BAND)
Freq Rate            11171,
Symbol Rate       30000
Polar                   Horizontal
Modulation        Mpeg2/Dvb s1
Mode                 FTA