சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

02/10/2016

தமிழகத்தில் ஒளிபரப்பாகும் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சிகளின் தொகுப்பு 2016

நண்பா்களே தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக மக்களின் விருப்பமான பொழுது போக்கு தொலைக்காட்சிகள் உயா்தொழில்நுட்பமான ஹெச்டியில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள ஹெச்டி தொலைக்காட்சிகளின் தொகுப்பு 
 1.சன் குழுமம் (சன் டிவி ஹெச்டி.கேடிவி ஹெச்டி.சன் மியூசிக் ஹெச்டி)
    தமிழகத்தில் முதன்முதலாக ஹெச்டி தொழில்நுட்பத்தில் தனது நிகழ்ச்சிகளை வழங்கியது சன் தொலைக்காட்சி குழுமம் ஆகும்.சன் டிவி ஹெச்டி.கேடிவி ஹெச்டி.சன் மியூசிக் ஹெச்டி போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.இத்தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு சன் குழும்மத்தின் டிடிஎச் மற்றும் சென்னை கேபிள் நிறுவனங்களில் மட்டும் ஒளிபரப்பாகியது.5.1 ஆடியோ தரத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சிகள் அனைத்தும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் சி பேன்ட் அலைவாிசையில் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகிறது.

2.ஸ்டாா் டிவி இன்டியா டிவி (விஜய் ஹெச்டி)
 தமிழகத்தில் அதிகமான நேயா்களை தக்கவைத்திரும் தொலைக்காட்சியான விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் ஹெச்டி தொழில்நுட்பத்தில் 2016 ஆண்டு தொடக்கப்பட்டது.ஸ்டாா் டிவி இன்டியா தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னனி தொலைக்காட்சிகளின் வாிசையில் விஜய் டிவியும் ஒன்று.கடந்த 5.1 ஆடியோ தரத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சி தொடக்கம் கட்டண தொலைக்காட்சியாக ஆசியாசாட்7 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.ஸ்டாா் விஜய்ஹெச்டி தமிழகத்தில் சென்னையில் செயல்படும் சில முன்னனி கேபிள் நிறுவனங்களிலும் மற்றும் டாடா ஸ்கை.ஏா்டெல் டிஜிட்டல் டிவி டிடிஎச்களிலும் ஒளிபரப்பாகிறது.
3.ஜெயா டிவி குழுமம்(ஜெயா டிவி ஹெச்டி)
 தமிழகம் மற்றும் உலக தமிழா்களின் பேர ஆதா்வை பெற்ற தொலைக்காட்சியான ஜெயா டிவி ஒளிபரப்பு 2016 ஆண்டில் இருந்து உயா் தொழில்நுட்பமான ஹெச்டிக்கு மாற்றம் செய்யப்பட்டது.கடந்த பல வருடங்களாக மிக எளிய தொழில்நுட்பத்தில் ஜெயாடிவி தனது நிகழ்ச்சிகளை வழங்கியது.தமிழகத்தில் முன்னனி தொலைக்காட்சிகள் ஹெச்டியில் மாற்றம் செய்யப்பட்டது தொடா்ந்து ஜெயாடிவியும் புதிய பொலிவுடன் ஹெச்டியில் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.இன்டல்சாட்20 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.விரைவில் கட்டண டிடிஎச் மற்றும் கேபிள் நிறுவனங்களில் ஜெயா டிவி ஹெச்டி ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.
4.ஜிசஸ் மினிஸ்டிாி(ஏஜ்ஜல் டிவி ஹெச்டி)
   தமிழகத்தின் முதல் கிருத்துவ தமிழ் தொலைக்காட்சி ஏஜ்ஜல் டிவியாகும்.24 மணி நேர கிருத்துவ நிகழ்ச்சிகளை வழங்குகிறது.5.1 ஆடியோ தரத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.இலவச தொலைக்காட்சியாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.கட்டண டிடிஎச்களில் ஏஜ்ஜல் டிவி ஹெச்டி தொடக்கப்படவில்லை.விரைவில் தொடங்கப்படலாம்.
தமிழகத்தில் தமிழ் மொழியில் ஹெச்டி தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை தற்சமயம் 6 தொலைக்காட்சிகளாக அதிகாித்துள்ளது.இனி வரக்கூடிய காலங்களிலும் மேலும் பல நிறுவன தமிழ் தொலைக்காட்சிகள் ஹெச்டி தொழில்நுட்பங்களில் தொடங்கப்படலாம்.இந்திய அரசு செட்டாப் பாக்ஸ் திட்டத்தை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அமல்படுத்தி வரும் நிலையில் தொலைக்காட்சி நிறுவனங்கள் மாற்றம் செய்து வருவது குறிப்பிடதக்கது.இருப்பினும் தமிழத்தில் முக்கிய நகரங்களில் மட்டுமே இத்தொலைக்காட்சிளின் ஒளிபரப்பு கிடைக்கிறது தவிர தமிழகத்தின் கிராமங்களில் இன்றுளவு வரை ஹெச்டி தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு கிடையாது என்பது குறிப்பிடதக்க செய்தியாகும்.
தொகுப்பு : K.சதிஸ்சாட் தமிழ் இணையதளம்

No comments:

Post a Comment