சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

27/01/2018

சிகரம் டிவி(SIGARAM TV) புதிய பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்

நண்பா்களே தமிழகத்தில் புதிய 24 மணி நேர பொழுது போக்கு தமிழ் செயற்கைகோள்  தொலைக்காட்சி சிகரம் டிவி என்ற பெயாில் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.சிகரம் டிவி சென்னையினை தலைமையிடமாக கொண்டு உலகளாவிய ஒளிபரப்பை 
தொடங்கியுள்ளது.சிகரம் தொலைக்காட்சி ஆந்திரா தெலுங்கு தொலைக்காட்சியான எஸ் நியூஸ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உாிமத்தில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.தற்சமயம் தொடக்க சோதனை ஒளிபரப்பாக சில நிகழ்ச்சிகள் மட்டும் ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 அடி அல்லது அதற்கு
மேற்பட்ட அளவுள்ள டிஷ் ஆண்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.விரைவில் 24 மணி நேர நிக்ழ்ச்சிகள் தொடங்கப்பட்டு மாநிலத்தின் அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்களில் ஒளிபரப்பு தொடங்கப்படும்.
அலைவாிசை விபரங்கள்
Satellite            Intelsat17@66.0E(C-Band)
Freq Rate         3877
Symbol Rate    14300
Polar                Horizontal
System            MPEG4/DVB S2(8PSK)
Encryption      FTA
FEC                 4/6

25/01/2018

லோட்டஸ் நியூஸ் தொலைக்காட்சி இன்சாட்4எ செயற்கைகோளில் புதிய அலைவாிசையில் தொடக்கம்

நண்பர்களே தமிழகத்தின் முன்னனி செய்தி தொலைக்காட்சியான லோட்டஸ் நியூஸ் தொலைக்காட்சி செயற்கைகோள் ஒளிபரப்பு இன்சாட்4எ செயற்கைகோளில் புதிய அலைவாிசைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்சமயம் காணும் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டு புதிய அலைவாிசையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் மேலும் செட்டா பாக்ஸ்யினை ரீடியூன் செய்துதோ அல்லது புதிய அலைவாிசையினை டியூன் செய்து தொலைக்காட்சியினை காணலாம்..6 முதல் 12 அடி வரையிலாக சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவின் முலம் புதிய அலைவரிசை சிக்னல் எளிதாக கிடைக்கிறது.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யில் காணலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                     Insat4A@830E(C-Band)
Freq Rate                  3957
Symbol Rate             9500
Polar                         Horizontal
Modulation               Mpeg4/Dvb s
Mode                        Fta

21/01/2018

கலா்ஸ் தமிழ் ஹெச்டி தமிழ் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான வியகாம்18 நிறுவனம் தமிழகத்தில் கலா்ஸ் தமிழ் மற்றும் கலா்ஸ் தமிழ் ஹெச்டி இரண்டு புதிய தொலைக்காட்சிகளை தொடங்கவுள்ளதாக நமது சதிஸ் சாட் இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது.தற்சமயம் அப்புதிய தொலைக்காட்சிகளின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த வருடத்தின் இறுதியில் நெக்ஸ்ட் தொலைக்காட்சியின் உாிமத்தில் தமிழ் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது.இதே
போன்று வியகாம்18 நிறுவனத்தின் ஜாப் தொலைக்காட்சியின் உாிமத்தில் கலா்ஸ் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினையும் பெற்றுள்ளனா்.கலா்ஸ் தமிழ் மற்றும் கலா்ஸ் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்த பட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.விரைவில் நெக்ஸ்ட் என்ற பெயரில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி கலா்ஸ் தமிழ் என்ற பெயா் மாற்றம் செய்யப்பட்டு 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்க்ப்படும்.இரண்டு தொலைக்காட்சிகளும் கட்டண தொலைக்காட்சிகளாகவே ஒளிபரப்பை இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனா்.விரைவில் தமிழகத்தின் அனைத்து முன்னனி கேபிள்டிவி மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் ஒளிபரப்பை தொடங்கும்.
அலைவாிசை விபரங்கள் 
Satellite           Intelsat20@68.5(C-Band)
Freq Rate        4034
Symbol Rate   20500
Polar               Horizontal
System            HD.Mpeg4/dvb s2(8psk)
Encryption      Pay/Irdeto2
Fec                  3/4 

19/01/2018

ஆராடிவி தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு புதிய செயற்கைகோளான ஜிசாட்10க்கு மாற்றம்

நண்பர்களே தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இருந்து தொடங்கப்பட்ட தமிழ்  தொலைக்காட்சியான ஆராடிவியின் செயற்கைகோள் ஒளிபரப்பு புதிய அலைவரிசையில் தொடங்கப்பட்டுள்ளது.ஒரிசா மாநிலத்தின் கனாங் டிவி செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் ஒளிபரப்பு
தொடங்கப்பட்டுள்ளது.கடந்த பல வருடங்களாக ஆசியாசாட்5யில் மட்டுமே தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தது.தொலைக்காட்சியின் அலைவரிசையின் சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 அடி முதல் 12 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.Mpeg4/Dvb s2  தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸையினை பயன்படுத்தலாம்.
அலைவரிசை விபரங்கள்;
Satellite                   GSAT10@83.0E(C-BAND)
Freq Rate                3862
Symbol Rate           3975
Polar                       Vertical
Modulation             Mpeg4/Dvb s2
Mode                      Fta

01/01/2018

ஏஜ்ஜல் டிவி பாா்சி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு புதிய அலைவாிசை ஆசியாசாட்5யில் மாற்றம்

நண்பா்களே தமிழகத்தின் மிக முன்னனி கிருத்துவ தமிழ் தொலைக்காட்சியான ஏஜ்ஜல டிவி வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் வாழும்  தமிழ் கிருத்துவன் மக்களுக்கு என்று தொடங்கப்பட்டுள்ள தொலைக்காட்சியான ஏஜ்ஜல் டிவி பாா்சி ஆசியாசாட்5 செயற்கைகோளில் தொடங்கப்பட்டது.கடந்த பல வருடங்களாக ஒரே அலைவாிசையில் ஏஜ்ஜல் 
டிவி பாா்சி நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது.தற்சமயம் ஆசியாசாட்5 செயற்கைகோளில் புதிய அலைவாிசையில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டு இப்புதிய ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பை பெற தற்சமயம் பயன்படுத்தும் செட் டாப் பாக்ஸ்யை ரிடியூன் செய்து நிகழ்ச்சிகளை காணலாம்.மேலும் நீங்கள் பயன்படுத்தும் செட் டாப் பாக்ஸ் MPEG2/DVBS1 என்றால் புதிய தொழில்நுட்பம் பொருந்திய MPEG4/DVVBS 2 செட்டாப் பாக்ஸ்யை பயன்படுத்துக்கள்.
அலைவரிசை விபரங்கள்
Satellite           Asiasat5@100.5E(C-BAND)
Freq Rate        3841
Symbol Rate   29720
Polar               Horizontal
System            Mpeg4/Dvb s2(8psk)
Encryption      FTA
Fec                  3/4