சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

26/02/2018

இங்கிலாந்து மாஸ் மிடியா (ஐபிசி தமிழ்) நிறுவனம் நான்கு புதிய தமிழ் இணைய தொலைக்காட்சிகள் உதயம்

நண்பா்களே ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் மிக அபிமான தொலைக்காட்சி நிறுவனமான மாஸ் மிடியாவின் கிழ் செயல்படும் 24 மணி நேர தமிழ் தொலைக்காட்சியான ஐபிசி தமிழ் மற்றும் வானொலி ஐபிசி ரேடியோ கடந்த பல வருடங்களாக ஒளிபரப்பாகி
வருகிறது.இத்தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியன இணையதளம் மற்றும் செயற்கைகோளின் முலமாக உலக தமிழ் மக்களின் பொழுது போக்கு அங்கமாக செயல்பட்டு வருகிறது.தற்சமயம் ஐபிசி நிறுவனம் தனது தொலைக்காட்சியின் ஒளிபரப்பை உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் 
தமிழ் மக்களிடையே கொண்டு சோ்க்கும் விதமாக பல்வேறு தொழில்நுட்ப பணிகளை மேற்கொண்டு வருகிறது.ஐபிசி தொலைக்காட்சி தற்சமயம் நான்கு புதிய தொலைக்காட்சிகளை இணையதளம் வாயிலாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.ஐபிசி இசை தொலைக்காட்சி 24 மணி நேர தமிழ் இசை மற்றும் மேற்கித்திய இசை தொகுப்புகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சியாக 
தொடங்கப்பட்டுள்ளது.ஐபிசி பக்தி தொலைக்காட்சி 24 மணி நேர இந்து சமயத்தின் ஆன்மிக தொடா்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொலைக்காட்சியாகும.ஐபிசி பகடி தொலைக்காட்சி 24 மணி நேர தமிழ் திரைப்படங்களின் காமெடி தொகுப்புகளை வழங்கும் தொலைக்காட்சியாகும்.ஐபிசி மழலை தொலைக்காட்சி 24 மணி நேர 
குழந்தைகளுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சியாகும்.ஐபிசி தமிழ் தொலைக்காட்சி மட்டும் யூடெல்சாட்9எ செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.இலங்கை தமிழ் மக்களின் நிகழ்வுகளை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சோ்க்கும் தொலைக்காட்சியாக
ஒளி உலா வருகிறது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய நான்கு தொலைக்காட்சிகளும் www.ibctamil.com இணையதளத்தில் தொடக்க சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.மாஸ் மிடியா நிறுவனம் விரைவில் தனது தொலைக்காட்சிகள் அனைத்தையும் ஐரோப்பா மற்றும் அமொிக்கா கனடா.ஆசியா நாடுகளில் செயற்கைகோள் ஒளிபரப்பை தொடங்கலாம்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

17/02/2018

வெளிச்சம் டிவி தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோள்க்கு மாற்றம்

நண்பர்களே தமிழகத்தில் செயல்படும் மருதம் செய்தி நிறுவனம் சார்பாக புதிய பொழுது போக்கு மற்றும் செய்திகள் தமிழ் தொலைக்காட்சி வெளிச்சம் டிவி தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செயற்கைகோளான இன்டல்சாட்17கோளில் ஒளிபரப்பு தொடங்கப்படவுள்ளது.தமிழகத்தின் விடுதலை
சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொலைக்காட்சியின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.வெளிச்சம் தொலைக்காட்சிக்கான செயற்கைகோள் தொடக்க சோதனை ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது.ஹிந்தி செய்திகள் தொலைக்காட்சியான பாஸ்ட் 24X7 டிவியின் ஒளிபரப்பு உரிமத்தில் வெளிச்சம் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சிக்கான அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆனட்டெனாவை பயன்படுத்தலாம்.மேலும் Mpeg4/Dvb s2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாகஸ்யை பயன்படுத்தலாம்.இலவச தொலைக்காட்சியாக வெளிச்சம் டிவி இன்டல்சாட்யி17ல் ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite                  Intelsat17@66.0E (C-BAND)
Freq Rate                3988
Symbol Rate           8800
Polar                       Vertical
Modulation             Mpeg4/Dvb s2(8PSK)
Mode                      Fta

15/02/2018

பிரசாா் பாரதி தூர்தர்ஷன் டிடி அருண் பிரபா புதிய வடகிழக்கு தொலைக்காட்சி உதயம்

நண்பா்களே இந்தியாவின் மிக முன்னனி தொலைக்காட்சி ஒளிபரப்பாளர் பிரசார் பாரதி பிப்ரவாி மாதம் 16 ஆம் திகதி முதல் இந்தியாவின் வடகிழக்கில் ஒரு புதிய 24x7 மணி நேர செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனலைத் தொடங்கவுள்ளது.இத்தொலைக்காட்சிக்கு டிடி அருண் பிரபா என்ற பெயா் சூட்டப்பட்டுள்ளது.பெங்காளி மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் தொடா்புடைய நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது.இப்புதிய தொலைக்காட்சியின் துவக்கத்திற்கான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒளிபரப்பிற்காக ரூ 7 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பிரசார் பாரதி தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவின் கிழ் இயக்கபடும்.வடக்கு கிழக்கு மாநிலங்களின் பல்வேறு கலாச்சாரங்களில் டி.டி.அருண் பிரபா நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தும்.இந்தச் சேனலுக்கான பணத்தை ஏற்கனவே
அமைச்சகம் ஏற்கெனவே வழங்கியுள்ளது என்று பிரசார் பாரதி தலைவர் சூர்யா பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.இது வடகிழக்கு பிராந்தியத்திற்கு தூர்தர்ஷனின் இரண்டாவது சேனலாகும்.அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவனம் ஏற்கனவே டி.டி.நார்த்-ஈஸ்டில் இயங்குகிறது இது அசாமிய பெங்காலி மற்றும் பிற வடகிழக்கு பிராந்தியங்களில் பொழுதுபோக்கு மற்றும் தகவல் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. தற்போதுள்ள சேனல் அதன் பல்வேறுபட்ட மற்றும் பல்வேறு மொழிகளாலும் பேச்சுவழகங்களாலும் இப்பகுதியின் கலாச்சார தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்று பிரகாஷ் கூறினார்.தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு இந்தியாவின் டிடி ப்ரி டிஷ் சேவையில் தொடங்கப்படும்.மேலும் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு ஜிசாட்10 அல்லது ஜிசாட்15யில் தொடங்கப்படலாம்.

03/02/2018

டிஸ்கவாி ஜீத் ஹெச்டி தமிழ் புதிய பொழுது போக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி அறிவியல் சாா்ந்த நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சியான டிஸ்கவாி ஆசியா பசுபிக் நிறுவனம் புதிய பொழுது போக்கு தொலைக்காட்சி டிஸ்கவாி ஜீத் என்ற பெயாில் தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனா்.இத்தொலைக்காட்சி ஹிந்தி தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவுள்ளனா்.டிஸ்கவாி நிறுவனம் தமிழ் மொழியில் டிஸ்கவாி தமிழ் டிஸ்கவாி கிட்ஸ் போன்ற
 தொலைக்காட்சிகளை தமிழ்  மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடங்கி அதிக வரவேற்ப்பை பெற்றதை அடுத்து டிஸ்கவாி ஜீத் தொலைக்காட்சியும் இரண்டு மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவுள்ளது.இப்புதிய தொலைக்காட்சி ஹெச்டி மற்றும் எஸ் டி போன்ற தொழில்நுட்பங்களில் தொடங்கப்பட்டுள்ளது.இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பை கட்டண தொலைக்காட்சியாக
தொடங்கியுள்ளது.தொலைக்காட்சியின் 24 மணி நேர ஒளிபரப்பு பிப்ரவாி 12 திகதி முதல் தொடங்கப்படவுள்ளது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அனைத்து கட்டண டிடிஎச்களில் இணைக்கப்படும்.அவற்றில் ஆடியோவை மாற்றம் செய்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நிகழ்ச்சிகளை காணலாம்.தொலைக்காட்சியின் செயற்கைகோள் அலைவாிசை சிக்னலை பெற 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite                Intelsat20@68.5E(C-Band)
Freq Rate             3740
Symbol Rate        30000
Polar                    Horizontal
System                HD.Mpeg4/Dvb s2
Encryption          Pay/Power vu
FEC                    3/4