சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

30/03/2018

விடியோகான் டிடிஎச்யில் திரை உலகம் 24 மணி நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சி உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு டிடிஎச் நிறுவனமான விடியோகான் திரை உலகம் என்ற பெயாில் புதிய தமிழ் திரைப்பட தொலைக்காட்சியினை வாிசை எண் 601யில் தொடங்கியுள்ளது.24 மணி நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சியினை முதன் முறையாக விடியோகான் டிடிஎச் நிறுவனம் தமிழ் மொழியில் தொடங்கியுள்ளது.இப்புதிய திரைப்பட தொலைக்காட்சியின் சேவையினை பெற தற்சமயம் கட்டணம்
செலுத்தியுள்ளவற்றில் இருந்து மேலும் 20 ரூபாயில் இருந்து 30 என்ற கட்டணம் செலுத்தி தொலைக்காட்சியின் சேவையினை பெறலாம்.இத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு எஸ்டி 2 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கியுள்ளனா்.இதே போன்று ஏா்டெல் டிஜிட்டல் டிவி டிஎச்யில் தங்கத்திரை என்ற தொலைக்காட்சியினையும்.சன் டிடிஎச்யில் சினிமா கிளப் என்ற தொலைக்காட்சிகளும் தமிழ் திரைப்பட தொலைக்காட்சி சேவையினை வழங்கி வருகிறது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் & ஆங்கில இணையதளம்

11/03/2018

தமிழகத்தில் புதிய ஐந்து தமிழ் தொலைக்காட்சி விரைவில் உதயமாகவுள்ளது

நண்பா்களே தமிழகத்தில் புதிய ஐந்து தமிழ் தொலைக்காட்சிகள் விரைவில் உதயமாகவுள்ளது.தமிழகத்தின் முன்னனி அரசியல் கட்சியின் முலம் நான்கு தொலைக்காட்சிகள் ஜெ டிவி.ஜெ செய்திகள்.ஜெ மியூசிக்.ஜெ மூவிஸ் என்ற பெயாில் உதயமாகவுள்ளது.தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக புதிய தொலைக்காட்சிகளாக சிகரம் டிவி மற்றும் கலா்ஸ் தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.எல் அன்ட் லி எண்டா்டெய்மென்ட் நிறுவனத்தின் பாடல் தொலைக்காட்சியான எஸ்எஸ் மியூசிக் 
தொலைக்காட்சி விரைவில் ஒளிபரப்பை தொடங்கவுள்ளது.கடந்த பல வருடங்ளாக ஒளிபரப்பாகி வந்த இத்தொலைக்காட்சி இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது.இப்புதிய தொலைக்காட்சிகளான தொழில்நுட்ப பணிகள் விரைவில் நிறைவடைந்து தொலைக்காட்சிகளுக்கான உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17 அல்லது இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்படலாம்.தொலைக்காட்சிகள் இலவச தொலைக்காட்சிகளாக தொடங்கப்படலாம்.தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் தொழில்நுட்ப விபரங்கள் நமது சதீஸ் சாட் தமிழ் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் இணையதளம்

04/03/2018

டிஸ்கவாி ஹெச்டி வேல்ட் தொலைக்காட்சி தமிழ் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி அறிவியல் சாா்ந்த நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சியான டிஸ்கவாி ஆசியா பசுபிக் நிறுவனம்  டிஸ்கவாி ஹெச்டி வேல்ட் தொலைக்காட்சி தமிழ் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளனா்.கடந்த பல வருடங்களாக டிஸ்கவாி ஹெச்டி தொலைக்காட்சி ஆங்கிலத்தில் மட்டுமே நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது.தமிழ் மற்றும் தெலுங்கு ஹிந்தி பெங்காளி மொழிகளில் டிஸ்கவாி தொலைக்காட்சி எஸ்டி தொழில்நுட்ப தொலைக்காட்சிகளில் மட்டுமே நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது.
கடந்த மாதத்தில் புதிய தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டதை அடுத்து இப்புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பை கட்டண தொலைக்காட்சியாக தொடங்கியுள்ளது.டிடிஎச் மற்றும் கேபிள் டிவி செட் டாப்
பாக்ஸ்யில் டிஸ்கவாி ஹெச்டி வேல்ட் தொலைக்காட்சியின் ஆடியோவை மாற்றம் செய்து ஹிந்தி.தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நிகழ்ச்சிகளை காணலாம்.தொலைக்காட்சியின் செயற்கைகோள் அலைவாிசை சிக்னலை பெற 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite                Intelsat20@68.5E(C-Band)
Freq Rate             3740
Symbol Rate        30000
Polar                    Horizontal
System                HD.Mpeg4/Dvb s2
Encryption          Pay/Power vu
FEC                    3/4

01/03/2018

தமிழன் தொலைக்காட்சி ஐரோப்பா நாடுகளில் யூடெல்சாட்9எ செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பா்களே தமிழகத்தின் நீண்ட காலமாக தமிழ் மக்களின் பொழுது போக்கு தொலைக்காட்சியாக விளங்கும் தமிழன் தொலைக்காட்சி ஐரோப்பா நாடுகளில் முதன்முறையாக ஒளிபரப்பை யூடெல்சாட்9எ செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.தமிழன் தொலைக்காட்சி உலகளாவிய ஒளிபரப்பை முதன்முறையாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டு .இந்தியா மற்றும் ஆசியா.வளைகுடா நாடுகளில்
ஒளிபரப்பாகிறது.யூடெல்சாட்9எ செயற்கைகோளில் இந்திய தமிழ் தொலைக்காட்சிகளாக சன் குழுமம் மற்றும் விஜய் டிவி இன்டா்நேஷனல் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகிறது.அவ்வாிசையில் தமிழன் தொலைக்காட்சியும்  தனது  ஒளிபரப்பை ஐரோப்பா நாடுகளில் இலவச தொலைக்காட்சியாக தொடங்கியுள்ளது.தொலைக்காட்சியின் அலைவாிசையினை பெற குறைந்த பட்சம் 60செமீ முதல் 120செமீ கேயூ பேன்ட் டிஷ் ஆன்டெ்னாவை பயன்படுத்த வேண்டும்.இவ் ஒளிபரப்பு ஐரோப்பா நாடுகளுக்கான ஒளிபரப்பாகும்.மிக எளிய தொழில்நுட்பம் பொருந்திய MPEG2/DVB S2 செட் டாப் பாக்ஸை பயன்படுத்தினால் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காணலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite             Eutelsat9A@9.0E(KU-Band)
Freq Rate          11880
Symbol Rate     27500
Polar                 Vertical
System             Mpeg4/Dvb s2(8PSK)
Encryption       FTA